நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறு வனங்களில் ஒன்றான ஐஐடி- களில் மாணவர்கள் தற் கொலை செய்வது அதிகரித்துக் கொண் டுள்ளது. இதனை தடுக்க ஒன்றிய அரசு எவ்வித நடவடிக்கை மேற்கொள்வதில்லை. அதனால் ஐஐடி- களில் மாணவர்க ளின் தற்கொலை சம்ப வங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வரு கின்றன. இந்நிலையில், தில்லி ஐஐடியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு பயிலும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகர் பகுதியைச் சேர்ந்த யாஷ் குமார் (21) என்ற மாணவன் செவ்வாயன்று தனது விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். யாஷ் குமாரின் மொபைல் போனை கைப்பற்றி தில்லி சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோடி பிரதமர் ஆன பின்பு ஐஐடி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை மிக மோச மான அளவில் அதிகரித்து வருகிறது. 2014 முதல் 2023 வரை கடந்த 9 ஆண்டுகளில் 120க்கும் மேற்பட்ட ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலை செய்த மாணவர்களில் ஒபிசி மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்களே அதிகம் என மக்களவையில் (2023இல்) ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.