states

புதிய பென்சன் திட்ட எதிர்ப்பு தினம்: பாதுகாப்புத் துறை ஊழியர்கள் முடிவு

சென்னை, ஜன. 11- தேசிய இளைஞர் தினத்தை (ஜன. 12) புதிய பென்ஷன் திட்ட எதிர்ப்பு தினமாக கடைபிடிக்க உள்ளதாக ஓசிஎப் அனைத்து சங்கங்கள் மற்றும்  அசோசியேஷன்களின் கூட்டு போராட்டக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து போராட்டக்குழு பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது. நாடு முழுவதும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றிய அரசில் பணிபுரிகின்றனர். மாநில அரசுக ளில் சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட் டோர் புதிய பென்ஷன் திட்ட ஊழியர்க ளாக உள்ளனர். ஊதியத்தில் மாதா மாதம் 10 விழுக்காடு பங்களிப்பு செலுத் திய பிறகும் பணி ஓய்வு பெறும்போது ரூ.2000, ரூ.3000 என்று சொற்பமான பென்ஷன் பெற வேண்டிய அவல நிலை உள்ளது. பழைய பென்ஷன் திட்டத்தில் ஓய்வு பெறும் ஊழி யர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறுகின்ற  மாதத்தின் அடிப்படை ஊதியத்தில் 50 விழுக்காடு பென்ஷன், ஆண்டுக்கு இரண்டு முறை டிஆர் உத்தரவாதம் உள்ளது. எனவே இன்றைய இளை ஞர்களின் முதுமைக்கால பாதுகாப் பிற்காக உத்தரவாதமில்லாத நாசகார புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, உத்தரவாதமுள்ள பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. புதிய பென்ஷன் திட்டத்திற்கு எதி ராக நாடெங்கிலும் உள்ள ரயில்வே,  பாதுகாப்பு, தபால், அனைத்து  ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள்,  துணை ராணுவப்படை வீரர்கள் என 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து நாடு தழுவிய இயக்கத்தை நடத்த திட்டமிட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான  ஜனவரி 12ஆம் தேதி தேசிய இளை ஞர் தினத்தை புதிய பென்ஷன் திட்ட எதிர்ப்பு பிரச்சார தினமாக நாடெங்கிலும் உள்ள ஒன்றிய, மாநில  அரசு ஊழியர்கள் கூட்டாக கடைபிடிக்க உள்ளனர். வரும் 21ஆம் தேதி புதிய பென்ஷன் திட்ட எதிர்ப்பு அகில இந்திய  மாநாடு நடத்தி இந்தாண்டு முழுவதும் புதிய பென்ஷன் திட்ட எதிர்ப்பு இயக்க ஆண்டாக நடத்தவும் திட்ட மிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.