states

பள்ளிபாளையத்தில் நாளை சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநாடு

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் ‘சிஐடியு தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் (சிஐடியு) மூன்றாவது மாநில மாநாடு பேரணி பொதுக்கூட்டம் ஜூன் 28 செவ்வாயன்று நடைபெற உள்ளது.  தமிழகத்தின் பாரம்பரிய தொழி லாகவும், ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் தொழிலாக விசைத்தறி தொழில் இருந்து வரு கிறது. ஒன்றிய மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக தற்போது பெரும்பாலோனோர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் மட்டும்  7 லட்சம் பேர் பணியாற்றி வந்து விசைத்தறி தொழிலில் தற்போது 25  சதவீதமாக தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நூல் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இருப்பினும் ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது உற்பத்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் விசைத்தறி தொழி லாளர்கள் 12 மணிநேரம் பணியாற்று வது என்பது கூடுதல் பணிச்சுமையாக இருந்து வருகிறது. முன்பு  6 முதல்  8 தறி இயக்கி வந்தனர். தற்பொழுது 12 முதல் 14 தறி இயக்கி வேண்டியச் சூழல் உருவாகியுள்ளது. இதுவே கடினமான வேலைச்சுமை. இதில் விசைத்தறி தொழிலாளர்கள் பணியில் சேர்வதற்கு முன்பு விசைத்தறி உரிமை யாளர் இடம்  முன்பணமாக 1.50 லட்சம் வரை பெற்றுள்ளனர்.இத்தொகை யினை விசைத்தறி தொழிலாளர்கள் திருப்பி செலுத்த முடியாமல் பணி செய்யும் இடத்தில் அடிமை போல பணியாற்றும் சூழல் உருவாகியுள்ளது. இச்சூழலில் விசைத்தறி தொழி லாளர்கள் 12 மணி நேரம் பணியாற்றி யும், போதிய சம்பளம் கிடைக்காத தால், குடும்பத்தை நடத்த வட்டிக்கு கடன் வாங்கி அந்த வட்டித் தொகையை  கட்ட முடியாமல் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போது சிஐடியு சங்கம் தொழிலாளர்களை அணி திரட்டி போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. மேலும் சம்பள உயர்வு போனஸ் உள்ளிட்ட சலுகைகளுக்காக பெற்றுத்தர ஆண்டுதோறும் தொடர்ச்சி யான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம், பஞ்சப்படி, வேலைக்கேற்ற இரட்டிப்பு சம்பளம் இலவச வீடு,  குழந்தைகள் படிப்பதற்கு உயர்கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும், அடை யாள அட்டை, சட்ட உரிமைகளை அமுலாக்க வேண்டும் என்று உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து,  2013ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்ட பள்ளிபாளையத்தில் பல ஆயிரம் தொழி லாளர்கள் கலந்து கொண்ட மாநில அள வில் மாநாட்டை நடத்தி உள்ளோம். இந்நிலையில், சம்மேளனத்தின் மூன்றாவது மாநில மாநாடு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வருகிற ஜூன் 28 தேதி நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் 200 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். மேலும் தேனி  காமராஜ் நினைவாக செங்கொடியும், சங்கரன்கோவில் மாடசாமி , திருப்பூர் சீரானபாளையம் பழனிச்சாமி, உள்ளிட்ட தியாகிகளின் நினைவு ஜோதி,  பள்ளிபாளையம் வேலுச்சாமி தியாகி நினைவாக கொடி மரமும் உள்ளிட்ட வற்றை சங்க நிர்வாகிகள் எடுத்து வருகின்றனர். இதனை மாநில தலைவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். இதில் ஜூன் 28 காலை சிஐடியு மாநிலத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் அ.சவுந்திரராசன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றுகிறார். மாலை 5 மணிக்கு உழைப்பாளர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அ.சவுந்திரராசன், எம்.சந்தி ரன், பி.முத்துசாமி, எம்.அசோகன்,கே.சி.கோபி குமார், எஸ்.சுப்பரமணி, என். வேலுச்சாமி, கே.மோகன்,சி.பத்மநாபன், பஞ்சாலை எ.அசோகன் உள்ளிட்டநிர்வாகிகள் உரையாற்ற உள்ளனர். பஞ்சாலை விசைத்தறி தொழி லாளர்களுக்கு மாத ஊதியம் 26,000, ஓய்வூதியம் 9000, தொழிலாளர் சட்டங் களை அமுலாக்க வேண்டும், ஜவுளித் தொழிலில் பணிபுரியும் அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் வீட்டுமனைகள் கட்டித்தர வேண்டும் மற்றும்ஜவுளி தொழிலை நெருக்கடியில் இருந்து பாதுகாக்க, என் டி சி ஆலைகளை திறந்து தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க மாவட்டங்களில் ஜவுளி சந்தை  அமைக்கவும், விசைத்தறிக்கு இலவச மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து 1,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை இடை விடாமல் முன்னெடுக்க எதிர்கால போராட்டங்களை திட்டமிட்டு விசைத்தறி தொழிலாளர்களுக்கு, சுரண்டல் பிடியிலிருந்து விடுதலை பெற்றுத் தரவும் விடியலுக்கான மாநாடு விசைத்தறி தொழிலாளர்கள் பள்ளிபாளையத்தில் சங்கமிப்போம்.

;