சென்னை, ஜன.4- ஊடகங்கள், ஊடக வியலாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலைக்கு டி.யூ.ஜெ. கடும் கண்டனம் தெரிவித்துள் ளது. இதுகுறித்து தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்ன லிஸ்ட்ஸ் ( டி.யூ.ஜெ.) மாநி லத்தலைவர் பி.எஸ்.டி.புரு ஷோத்தமன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் உள்ள பா.ஜ.க மாநில தலைமை அலுவலகத்தில் ஜனவரி 4 புதன்கிழமையன்று காலை செய்தியாளர் சந்திப்பை தமி ழக பாஜக தலைவர் அண் ணாமலை நடத்தியுள்ளார். அப்போது,புதிய தலை முறை செய்தியாளர் இரா.முருகேசன், சமீபத்திய கோயம்புத்தூர் ஈஷா மையத்தில் இருந்து காணா மல் போய் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் ஒருவரின் மர்ம மரணம் குறித்து, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் எழுப்பியுள்ள சந்தேகங்கள் குறித்து கூறி, இதற்கு பாஜக தரப்பு நிலைபாடு என்ன என்கிற கேள்வியை அண்ணாமலையிடம் நேருக்குநேர் கேட்டுள்ளார்.
இந்த கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தன் நிதானத்தை இழந்த தமி ழக பாஜக தலைவர் அண்ணாமலை, கேள்வி கேட்டவரைப் பார்த்து நீங் கள் எந்த ஊடகம் என்று கேட்க ஆரம்பித்து, செய்தி யாளரின் கேள்விக்கு நோக் கம் கற்பிக்கும் வகையில் பேசியிருக்கிறார். அண்ணாமலை ஊடக வியலாளர் கேள்வியை எதிர்கொள்ள முடியா விட்டால் அமைதி காக்க லாம். மாறாக ஊடகவியலா ளர்கள், எந்த ஊடகம் என் பதை கேட்பதுடன் அவர் களின் கேள்விக்கும் செய்தி சேகரிக்கும் பணி குறித்தும் அவதூறு செய்வது ஆரோக் கியமான செயல் அல்ல. இந்த நிதானமற்றப் போக்கு ஒரு கட்சியின் தலை வருக்கு அழகல்ல. இந்த மோசமான அணுகுமுறை யை மிரட்டல் போக்கை தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் சங்கம் வன்மையாகக் கண்டிக்கி றது. அண்ணாமலை தமி ழக பா.ஜ.க தலைவராகப் பொறுப்பு ஏற்றதிலிருந்து இன்று வரை, ஊடகங்களின், ஊடகவியலாளர்களின் உரி மையை உணர்வுகளை உர சிப்பார்க்கும் போக்கை கடைப்பிடித்துவருகிறார். அவரது இந்த செயலை டி.யூ.ஜெ.வன்மையாக கண்டிப்பதுடன், இனியா வது அவர் நாகரீகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.