2020-ஆம் ஆண்டு தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜேஎன்யு முன்னாள் மாணவர் உமர் காலித் திற்கு தில்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. உமர் காலித் தின் சகோதரியின் திரு மணத்தில் கலந்து கொள்வதற்காக ஒரு வார காலம் மட்டுமே (டிசம்பர் 23 முதல் 30 வரை) ஜாமீன் வழங்கப்பட்டுள் ளது. மீண்டும் டிசம்பர் 30- ஆம் தேதி சரணடைய வேண்டும் என தில்லி நீதி மன்றம் உத்தர விட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரண மாக செங்கல்பட்டு மாவ ட்டத்தில் மழை வெளு த்து வாங்கிய நிலையில் வேடந்தாங்கல் ஏரி நிரம்பியது. இதனால் பறவைகள் சரணாலய பகுதியில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் குவிந்தன.
ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதில் கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாடு புறக்கணிக் கப்பட்டு வருகிறது. வடக்கு ரயில்வே திட்டங் களுக்கு அதிக நிதியும், தெற்கு ரயில்வே திட்டங் களுக்கு குறைந்த நிதி யும் ஒதுக்கப்பட்டு வரு கிறது என மக்களவை யில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றச்சாட்டு.
சபரிமலையில் தரிசனத் திற்கு வரும் பக்தர்கள் எண் ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலை யில், நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பேரை அனு மதிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
கோவை காந்தி பார்க்கில் மாநகராட்சி சார்பில் பொது இடத்தில் குப்பையை கொட்டி னால் ஆயிரம் ரூபாய் அப ராதம் விதிக்கப்படும் என பேனர் வைக்கப்பட்டுள் ளது. இந்த பேனரில் தமிழ் மொழியில் மேலே யும், பெங்காலி மொழி யில் கீழேயும் எழுதப் பட்டிருந்ததற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர்.
மாண்டஸ் புயலின் மழை யால் சேலம் மாவட்டத் தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஏற் காட்டில் புதிதாக 20 அருவிகள் உருவாகிய நிலையில், அப்பகுதி தற்காலிக சுற்றுலா தலமாக மாறியுள்ளது.
இங்கிலாந்து தலை நகர் லண்டனின் “ஸ்டான்ஸ்டட்” விமான நிலையத்தின் ஒற்றை ஓடுபாதையையும் பனி மூடியதால் விமான சேவை பாதிக்கப் பட்டுள்ளது.
25 நாட்கள் விண்வெளி பயணத்தை நிறைவு செய்துவிட்டு பூமிக்குத் திரும்பியது நாசாவின் “ஓரியன்” விண்கலம்.
தொடர்மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட் டம் பாலாற்றில் 1742 கன அடி உபரிநீர் திறக்கப் பட்ட நிலையில், பாலாற் றின் இரு கரையோரங் களிலும் உள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.