சென்னை, நவ. 9- அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரி யர்களுக்கு, ஊழியர்களுக்கு அக்டோ பர் மாத ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 58,000 பள்ளிகள் இயங்குகின்றன. அரசு உதவி பெறும் பள்ளிகள் 8,000க்கும் மேல் உள்ளன. அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரி யர்களும், ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். இங்கு சுமார் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். இந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்க ளுக்கான ஊதிய பட்டியல் மாதம் தோறும் 20ஆம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப் படும். அதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் கையெழுத்திட்ட பின் கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆசிரியர்களின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படுகிறது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக முறையில் மேற் கொள்ளப்பட்ட மாற்றத்தின் அடிப்படை யில், ஏற்கனவே இருந்த மாவட்ட கல்வி அலுவலகங்களின் எண் ணிக்கை 120இல் இருந்து 152ஆக உயர்ந்துள்ளது. ஆனால் பல மாவட்ட கல்வி அலுவலர்கள் இன்னும் முழுமை யாக பொறுப்பேற்கவில்லை என்றும், சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட் டுள்ளதாலும் சென்னை உட்பட பெரும் பாலான மாவட்டங்களில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழி யர்களுக்கான ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா.பெருமாள்சாமி கூறுகை யில், தமிழ்நாடு முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றக் கூடிய ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு அக்டோபர் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட கல்வி அதிகாரிகள் மாற்றம் மற்றும் அலுவலர்களின் இடமாறுதல் காரண மாக ஊதியம் வழங்குவதில் காலதா மதம் ஏற்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. உடனடியாக ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டம் தவிர்க்க இயலாதது என்று கூறினார்.