சென்னை,ஜூலை 22- அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர் செல்வத்துக் கும் இடையே மோதல் முற்றிய நிலையில் கடந்த 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செய லாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக்குழு கூட்ட த்தை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று முன்னதாக ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்தது. இதனால் திட்ட மிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வும், பொதுக்குழு கூட்டத்தை சட்ட விரோதம் என்று அறிவிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட் டுள்ளது.
பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதுடன் 11 ஆம் தேதி நடை பெற்ற பொதுக்குழு சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டு என்று ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த மனுவை திங்க ளன்று (ஜூலை 25) விசாரிக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு உள்ளிட்ட அனைத்து வழக்குகள் மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது. மேலும் வழக்கை திங்கட் கிழமை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரின் கோரிக் கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இதற்கிடையே, அதிமுக உறுப்பினர் எனக்கூறி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, ஒற்றைத் தலை மையை உருவாக்கும் வகை யில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். பிரியா, இடைக் கால மனு குறித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் இடைக் காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகி யோர் பதிலளிக்க உத்தர விட்டார். மேலும், ஒற்றைத் தலைமை தொடர்பான பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரிய வழக்கு செப்டம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.