states

அரசு மருத்துவமனைகளில் ரூ.918 கோடியில் புதிய மருத்துவ கட்டமைப்புகள்

சென்னை,ஏப்.19- தமிழ்நாடு சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் செவ்வாயன்று (ஏப்.18)  நடைபெற்றது. பின்னர் பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:  மாரடைப்பால் ஏற்படும் உயிரி ழப்பை தடுக்க, இருதய பாதுகாப்பு மருந்துகள் வழங்கப்படும். சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி  நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்து வமனைக்கு ரூ.146.52 கோடியில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும். சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.64.90 கோடியில் புதிய மாணவியர் விடுதி கட்டப்படும். அனைத்து அரசு மருத்துவ மையங்களில் ஆய்வக சேவை களும் ரூ.185.24 கோடியில் மேம்படுத் தப்படும்.

4,133 பணியிடங்கள்..

மருத்துவம் சார்ந்த 4,133 காலிப் பணி யிடங்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (எம்ஆர்பி) மூலம் நிரப்பப்படும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், சித்தா, ஓமி யோபதி, ஆயுர்வேத மருத்துவ நிலை யங்களில் ரூ.917.68 கோடியில் புதிய மருத்துவக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.  ரூ.298.95 கோடியில் அரசு மருத்து வமனைகளுக்கு சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட உயிர்காக்கும் நவீன  உபகரணங்கள் வழங்கப்படும். தாய்-சேய் நல சேவை திட்டங்கள் ரூ.43.41 கோடியில் மேம்படுத்தப்படும்.

சுகாதார நடை பயிற்சி

“நடப்போம் நலம் பெறுவோம்” எனும்  நோக்கத்தில் அனைத்து மாவட் டங்களிலும் 8 கி.மீ. தொலைவு கொண்ட  நடைபாதை கண்டறியப்பட்டு, உள்ளூர்  மக்களுடன் இணைந்து மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ‘சுகாதார நடைபயிற்சி’ மேற்கொள்ளப்படும். அப்போது, சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். நகராட்சி, மாநகராட்சிகளில் பணி புரியும் 60,587 தூய்மைப் பணியாளர்க ளுக்கு முழு உடல் பரிசோதனை மற்றும்  சிறப்பு முகாம் நடத்தப்படும். தூய்மை பணியாளர்கள் நலன் கருதி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி  அறை அமைத்து தரப்படும். ஒருங் கிணைந்த ஆய்வக கட்டமைப்புகள், கருவிகள் ரூ.304.12 கோடியில் மருத் துவமனைகளுக்கு வழங்கப்படும்.

சிசிடிவி கேமராக்கள்

கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங் களில் உள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.10.17 கோடியில் கண்காணிப்பு (சிசிடிவி)கேமராக்கள் அமைக்கப்படும். போதை மீட்பு சேவைகள் தேவைப் படும் பகுதிகளை கண்டறிந்து, உரிய மனநல ஆலோசனை மற்றும் புனர்வாழ்வு சேவைகள் அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் கிடைக்க ஏதுவாக ரூ.523 கோடியில் கட்டமைப்பு வலுப்படுத்தப்படும். மேலும், ரூ.21.4 கோடியில் 62 புதிய 108 அவசர கால ஊர்திகள்,13 தாய்-சேய் ஊர்திகள் மற்றும் 92 நவீன மருத்துவக் கருவிகள் வழங்கப்படும் என்பன உட்பட 106 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.