அறந்தாங்கி, செப்.20- புதுக்கோட்டை மாவட்டம் ஜெக தாப்பட்டினம் விசைப்படகு துறை முகத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 87 விசைப்படகுகள் கடலுக் குள் மீன் பிடிக்க சென்றன. இதில் தமிழ்ச்செல்வன் (37) என்பவருக்கு சொந்தமான IND TN08 MM346 பதிவு எண் கொண்ட விசைப்படகில், அவருடன் விஜி (28), தினேஷ் (26), ரஞ்சித் (27), பக்கிரிசாமி (45), கமல் (25), புனுது (41), கார்த்திக் (27) ஆகிய எட்டு மீனவர்களும் செவ்வா யன்று அதிகாலை 2 மணி அளவில் 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 மீனவர்களையும் கைது செய்து, காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட் டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், “இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் புதுக் கோட்டை மாவட்ட மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு, ஒன்றிய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.