பாஸ்போர்ட் சேவைகளை விண்ணப்பிப்பதற்கான ஒன்றிய அரசின் வெளியுறவு அமைச்ச கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.passportindia.gov.in ஆகும். நாடு முழுவதும் உள்ள 36 பாஸ்போர்ட் அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 190 இந்திய தூதர கங்கள் மற்றும் பதவிகளின் நெட்வொர்க் மூலம் இந்திய குடிமக்களுக்கு பாஸ்போர்ட்களை வழங்க ஏற்பாடுகள் உள்ள நிலையில், 1. www.indiapass port.org, 2. www.online-passport india.com, 3. www.passportindiapor tal.in, 4. www.passport-india.in, 5. www.passport-seva.in, 6. www.applypassport.org. பெயரில் 6 போலி பாஸ்போர்ட் இணையத்தளங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.