states

மருத்துவப் படிப்புக்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சென்னை,அக்.5- தமிழ்நாட்டிலுள்ள 36 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் 20 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.  மருத்துவ இடங்களுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கியது. மாணவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பிக்க 3 ஆம் தேதி கடைசி நாளாக  அறிவிக்கப்பட்டி ருந்தது.  நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்ற னர். ஆயுதபூசை விஜயதசமி தொடர் விடுமுறை வந்த காரணத்தால் விண்ணப் பிக்க அவகாசம் 6 ஆம் தேதி மாலை 5 மணி  வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 3 ஆம் தேதி மாலை நிலவரப்படி 39,272 பேர் பதிவு செய்த னர். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத் தவர்களின் எண்ணிக்கை 34,966 ஆகும்.  அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 24,529 பேர்  பதிவு செய்துள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,743 பேர் பதிவு செய்தனர். மாற்றுத்திறனாளிகள் 83 பேரும், முன்னாள் படை வீரர் வாரிசுகள் 345 பேரும், விளையாட்டு பிரிவு மாணவர்கள் 297 பேரும் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்துச்செல்வன் தெரிவித்தார்.  2 நாட்களில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி இருக்கும். வியாழக்கிழமை (அக்.6) மாலை  வரை அவகாசம் இருப்பதால் மேலும் சிலர்  விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  அரசு மருத்துவ கல்லூரிகளில் மட்டும் 5050 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இது தவிர கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் 125 இடங்கள் கிடைக்கின்றன. மேலும் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மூலம்  அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 3050 பெறப்படு கிறது. மொத்தம் 8225 எம்.பி.பி.எஸ். இடங்கள்  உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டு  இடங்கள் 15 விழுக்காடு 848 போக மீத முள்ள 7,377 எம்.பி.பி.எஸ். இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன. இதில் 1,290 எம்.பி.பி.எஸ். இடங்கள் சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாகும். 

;