states

வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் : இந்து முன்னணியைச் சேர்ந்த 4 பேர் கைது

கோயம்புத்தூர், மார்ச் 13- மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம் பெயர் தொழி லாளி கௌதம் சியாமல் கட்டுவா.  இவர், தனது நண் பர்கள் தன்மாய் ஜனா, ஜெகத் ஆகியோருடன் கோவை இடையர் வீதியில்  நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது, இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சூரிய பிரகாஷ், பிரகாஷ் ஆகியோரும், கல்லூரி மாணவர்கள் பிரகதீஷ், வேல்முருகன் ஆகியோரும் அந்த வழியாக நடந்து வந்துள்ளனர். அப்போது கௌதம் சியாமல் கட்டுவா மற்றும் அவருடன் வந்த தன்மாய் ஜனா  ஆகியோர் வழிவிடாமல் நடந்து  சென்ற தாகக்  கூறி சூரிய பிரகாஷ் மற்றும் அவருடன் வந்த நபர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், பானிபூரி  கடையில் இருந்த மோனோ, ஷேக் சவான் என்ற மேற்கு  வங்க மாநிலத்தைச் சேர்ந்த  இரு புலம் பெயர் தொழி லாளர்களையும் சூரியபிரகாஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள் தாக்கியுள்ளனர்.  இந்த தகவல் கிடைத்த மேற்குவங்க மாநில தொழிலாளர்கள் அங்கு திரண்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து  தாக்கு தல் சம்பவம் குறித்து கௌதம் சியாமல் கட்டுவா வெரைட்டிஹால் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இந்து முன்னணி யைச் சேர்ந்த சூரிய பிரகாஷ், பிரகாஷ், கல்லூரி மாண வர்கள் பிரகதீஷ், வேல்முருகன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேற்குவங்க தொழிலா ளர்களை இந்து முன்னணி அமைப்பினர் தாக்கிய சம்பவம், திட்டமிட்டே பதற்றச் சூழலை உருவாக்கும் நடவடிக்கைகளை இவ்வமைப்பினர் செய்கிறார்களோ என்கிற ஐயம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.