states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் 175 நாடுகள் பங்கேற்ற கூட்டத்தில் பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 2040 ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் கழிவுகளை 80% குறைப்பதற்கான ஆய்வறிக்கை வரைபடம் வெளியிடப்பட்டது. 

கடுமையான வெயில் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1 முதல் ஜூலை 2 வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இந்த காலகட்டத்தில் மூட வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகச் செய்திகள்

துர்க்கியேயில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் இரண்டா வது சுற்றில் தற்போதைய ஜனாதிபதி ரிசெப் தய்யிப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டி யிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கேமல் கிளிக்டரோக்லுவை தோற்கடித்தார். எர்டோகனுக்கு 52.14 விழுக்காடு வாக்குகளும், கிளிக்டரோலுவுக்கு 47.86 விழுக்காடு வாக்குகளும் கிடைத்திருக் கின்றன. ஏற்கனவே கடந்த 20 ஆண்டுகளாக ஜனாதிபதிப் பொறுப்பில் எர்டோகன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் நடை பெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் சோசலிஸ்டு கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் வலதுசாரிகள் வெற்றி பெற்றிருக்கின்றனர். பிரிவினைவாதி களோடு சோசலிஸ்டுகள் கைகோர்த்திருக்கிறார்கள் என்ற வலதுசாரிகளின் பிரச்சாரம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்தத் தோல்விக்கான காரணங்களில் ஒன்று என்று கூறப்படுகிறது.

வரிகளை உயர்த்தி, ராணுவ பலத்தை அதிகரிக்கும் முயற்சி களுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகளை ஜப்பான் சமூக அமைப்புகள் வலியுறுத்தி யுள்ளன. இந்த அமைப்புகள் மக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கத்தை நடத்தியிருக்கிறார்கள். 1 லட்சத்து 33 ஆயிரத்து 406 கையெழுத்துகள் அடங்கிய கோரிக்கை மனுவை நாடாளுமன்ற அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதற்காக நடைபெற்ற பேரணியில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கொய்கே அகிரா பங்கேற்றுப் பேசினார்.