states

img

பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கம்: நாளை முதல் டோக்கன் விநியோகம்

சென்னை,டிச.25- பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏழை-எளிய  மக்களுக்கு சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரிசி  பெரும் குடும்ப அட்டை வைத் திருப்பவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  வழக்கமாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப் படும். கடந்த ஆண்டு கரும்புடன்  21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு அரசு சார்பில்  வழங்கப்பட்டன. இந்த வருடம்  ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர்அறிவித்தார்.  அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும் பத்தினருக்கு இவை வழங்கப் படவுள்ளது. இதன் மூலம் 2 கோடியே 19 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் இதற்காக அரசுக்கு சுமார் ரூ.2,356  கோடி செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பொங்கல் ரொக்கப் பணம் வழங்கும் நிகழ்ச்சியை அடுத்த மாதம் (ஜனவரி) 2 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொது மக்க ளுக்கு வழங்குகிறார்கள்.  பொங்கல் ரொக்கப் பணம் தமிழகத்திலுள்ள 33,000 நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கப்படவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் திங்களன்று (டிச.26) முதல் நடைபெறுகிறது. ரேசன் கடைகளில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கைவிரல் ரேகை  பதிவு செய்யப்படுகிறது. குடும்பத்  தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மூலம் ரேசன் பொருட்களை பெற  முடியும்.  அது போல பொங்கல் தொகுப்பு பச்சரிசி, சர்க்கரை, ரூ.1000 ரொக்கம் பெறவும் கைரேகைப் பதிவு இந்த முறை அவசியமாக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் யாரா வது ஒருவர் கைரேகைப் பதிவு  செய்தால் மட்டுமே பொங்கல்  பரிசு கிடைக்கும். முறைகேடு  நடைபெறுவதை தடுப்பதற் காக இவை கட்டாயமாக்கப் பட்டுள்ளது.  நியாயவிலைக் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வழக்கம் போல  டோக்கன் முறை செயல்படுத் தப்படுகிறது. தினமும் 100 முதல் 200 குடும்ப அட்டைகளுக்கு ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் விநியோகம் செய்ய திட்டமிடப் படுகிறது. வருகிற 27, 28 ஆம்  தேதிகளில் வீடுகளுக்கு டோக்கன்  வழங்கப்படவுள்ளது.