states

உத்தர்கண்ட் நிலச்சரிவில் சிக்கி சாதனையாளர் உட்பட 10 பேர் பலி

உத்தர்கண்ட், அக்.6- உத்தர்கண்டின் உத்தர்காசி மாவட்டத்தில் பனிச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை  பத்தாக அதிகரித்துள்ளது.  நேரு மலையேறுதல் நிறுவனத்தைச் சேர்ந்த 41 பேர் கொண்ட குழு செவ்வாய்க்கிழ மை காலை திரௌபதி கா தண்டா  உச்சி யில் பனிச்சரிவில் சிக்கியது. 12 பேர் மீட்கப் பட்ட நிலையில், 19 பேரைக் காணவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலை யில் தற்போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள்  வியாழக்கிழமை காலை தொடர்ந்தது. காணாமல் போனவர்கள் பனிச்சரிவு ஏற்பட்ட டோக்ரியானி பாமாக் பனிப்பாறை யில் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மலையேறும் பயிற்சியில் மேற்கு வங்கா ளம், தில்லி, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, அசாம், ஹரியானா, குஜராத், ஹிமாச்சல பிரதேசம், உத்தர்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இதற்கிடையில் மீட்பு நடவடிக்கைகள் தொடரும் பகுதியில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம்  கூறியுள்ளது. குமாவுன் பிராந்தியத்திற்கு உட்பட்ட மாவட்டங்கள் மற்றும் கர்வால்  பிராந்தியத்தின் அருகிலுள்ள மாவட்டங் களில்  ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது. இந்த ஆண்டு  16 நாட்களில் எவரெஸ்ட் சிகரம் மற்றும் மகாலு சிகரத்தில் ஏறி தேசியச் சாதனை படைத்த முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை பெற்ற  சவிதா கன்ஸ்வால், பனிச்சரிவில் சிக்கி உயிரிழ ந்தவர்களில் ஒருவர். இவர் மே 12-ஆம் தேதி அன்று எவரெஸ்ட் சிகரத்தையும் (8,848 மீ)  மே 28-ஆம் தேதி உலகின் ஐந்தாவது உயரமான சிகரமான மகாலு (8,485 மீ) சிகரத்தையும் அடைந்தார்.

;