states

img

ஒடுக்கப்பட்டோரை பாதுகாக்க உறுதிபூண்ட கேரளம் முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்

திருவனந்தபுரம்: சமூகத் தில் ஒடுக்கப்பட்ட மக்களுக் காக கேரளா நிற்கிறது. அவர்களுக்காக நிலச் சீர்திருத்தம் முதல் நல  ஓய்வூதியம் வரை அனைத் தும் செயல்படுத்தப்பட்டது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரத்தில் குடி யரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு மாநில அரசு அளித்த குடிமக்கள் வர வேற்பு நிகழ்ச்சியில் முதல்வர்  பேசினார்.  அப்போது அவர் மேலும்  கூறியதாவது: பட்டியல் பழங்குடி யினருக்கு, அவர்களின் மக்கள்தொகைக்கு அதிக மான பட்ஜெட் ஒதுக்கீட்டை உறுதி செய்தல். தனிநபர் வருவாய் குறைவாக இருந் தாலும், உலகத்தரம் வாய்ந்த வளர்ச்சித் திட்டங் களை கேரளா மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் எந்தவொரு குடிமகனும் சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் வாழ்வ தற்கான சூழல் உலகில் வேறு  எங்கும் காண முடியாத  வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. முழு சமூகத் திற்கும் சமத்துவத்தை உறுதிப் படுத்தும் வகையில் விரி வான வளர்ச்சி நடவ டிக்கைகள் தற்போது ஆரம் பிக்கப்பட்டுள்ளன. உள்ள டக்கிய வளர்ச்சிக் கொள்கையை அரசு உறுதி செய்துள்ளது. 1998 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்தில் உருவான குடும்பஸ்ரீ இன்று மிகவும் முன்னேறியுள்ளது. சிறந்த சேவை வழங்குநராக குடும்பஸ்ரீ மாறியது. சமூகத் தின் அடிமட்டத்தில் உள்ள  உள்ளூர் சுய-அரசு (உள் ளாட்சி) அமைப்புகளுடன் தீவிரமாக பணியாற்றுகிறது. லட்சக்கணக்கான உறுப்பி னர்களின் வாழ்வுடன், செயற் பாட்டுத் துறையின் முன் னேற்றத்திற்கு கணிசமான பங்களிப்பை குடும்பஸ்ரீ வழங்குகிறது என முதல்வர் தெரிவித்தார்.

;