states

img

பெண்கள் மீதான வன்முறைகளில் கடும் நடவடிக்கை... விரைவான தண்டனைக்காக சிறப்பு நீதிமன்றம்.... கேரள முதல்வர்....

திருவனந்தபுரம்:
பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். குற்றவாளி களுக்கு விரைவாக தண்டனை வழங்கு வதை உறுதி செய்ய சிறப்பு நீதிமன்றம் அமைக்க முடியுமா என்பதை அரசாங்கம் ஆராயும் என்றும் முதல்வர் கூறினார்.

காவல்துறைக்கான கட்டிடங்களின் அடிக்கல் நாட்டும் பணியை ஆன்லைனில் தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது: வரதட்சணை வழக்குகளில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வரதட்சணை என்பது ஒரு சமூக பேரழிவு. ஒரே தொலைபேசி அழைப்பில் புகார்தாரர்களை காவல்துறை அணுக வேண்டும். சட்டத்தின் பெயரால் அது பாதிக்கக்கூடாது. பெண்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக்க காவல்துறையின் ஒத்துழைப்பு தேவை. பெண்கள் அச்சமின்றி காவல்
நிலையத்திற்கு வருவது சாத்தியமாக வேண்டும் என்று முதல்வர் கூறினார்.கேரளத்தில் சில அவமானகரமான சம்பவங்கள் அண்மையில் நடந்துள்ளன. கேரளம் அத்தகைய நாடாக மாற வேண்டியதில்லை. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வார்டு நிலை விழிப்புணர்வு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதுபோன்ற வழக்குகளில் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப வன்முறை உள்ளிட்ட சிரமங்களை அனுபவிக்கும் பெண்களுக்கு அதுகுறித்து புகாரளிக்கசிறப்பு எண் ஒதுக்கப்படுகிறது. இதற்காக மகளிர் காவல்துறை அதிகாரிக்கு சிறப்புபணி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, மாநில காவல்துறைத் தலைவரின் அலுவலகத்தையும் தொடர்புகொள்ளலாம். மேலும் சில  பயனுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார்.

;