ஒன்றிய அரசின் கொள்கை களுக்கு எதிராக சிபிஎம் மக்களை திரட்டும். மாநிலத் துக்குத் தகுந்த தனிநபர் வருவாயை ஒன் றிய அரசு வழங்கவில்லை. இதனால் அர சுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடாக தர வேண்டிய 12000 கோடி ரூபாய் வழங்கப் படவில்லை. வருவாய் பற்றாக்குறை 4 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. கடன் வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. சந்தை தலையீட்டிற்கு தேவயான பணத்தை ஒன்றிய அரசு அனுமதிப்பதில்லை. விலைவாசி உயர்வை மாநில அரசு தடுத்து வருகிறது. ஒன்றிய அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக பேச காங்கி ரஸ் கட்சி தயாராக இல்லை. ஒன்றிய அர சின் பொருளாதாரத் தடைகளை எதிர் கொள்ள மக்கள் போராட்டம் நடத்தப்படு கிறது. பாடத்திட்ட சீர்திருத்தத்தின் ஒரு பகுதி யாக காவி மயமாக்கப்பட்ட நூல்கள் வர விருக்கின்றன. இந்தக் குழுவில் ஆர்எஸ்எஸ்காரர் சேர்க்கப்பட்டது இதற்காகத்தான். சங்பரிவாரத்தின் நோக் கம் கலகம். ஒரு வேட்பாளர் தேர்தலின் போது எந்த நபரையும் சந்திக்கலாம். சுகு மாரன் நாயரின் (நாயர் சமூகத் தலைவர்) சமதூர அறிவிப்பு நல்லது. சம தூரம் என்பது பெரும்பாலும் சமமாக இருக்காது என்றார் எம்.வி.கோவிந்தன்.
திருவனந்தபுரத்தில் சிபிஎம் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் திங்களன்று (ஆக.14) செய்தியாளர்களிடம் கூறியது