states

img

முதல் விடுதலைப் போராட்டத்திற்கு இணையானது தில்லி விவசாயிகள் போராட்டம்.....

திருச்சூர்:
விவசாயிகளுக்கு எதிரான கறுப்புச் சட்டத்திற்கும் உலகமயமாக்கல் கொள்கைக்கும் எதிராக தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக 1857 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற முதலாவது விடுதலைப் போராட்டத்திற்கு இணையானதாகும் என்று கேரள மாநில விவசாயிகள் சங்க செயலாளர் கே.என்.பால கோபால்கூறினார்.சிபிஎம் மற்றும் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், எல்டிஎப்ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த கே.பி.அரவிந்தாக்சனின்  14 ஆவது நினைவு நாளையொட்டி நடந்தகருத்தரங்கை தொடங்கி வைத்து கே.என்.பாலகோபால்  மேலும் கூறியதாவது:

கோவிட் பின்னணியில் நாடுமுழுவதும் ஊரடங்கில் இருந்தபோது, நரேந்திர மோடி நாட்டை சந்தை சக்திகளுக்கு திறந்து வைத்தார்.இதன் மூலம், கார்ப்பரேட்டுகள் வேறு எந்த துறையையும் விட உணவு தானியங்கள் துறையிலிருந்து அதிக லாபம் பெறும்.தலைநகரில் விவசாயிகளின் போராட்டம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கானதல்ல. விவசாய விளைபொருட்களின் தற்போதைய விலையை பராமரிக்க இளம் மற்றும் வயதான விவசாயிகள் வீதிகளில் இறங்கியுள்ளனர். சிறிய, பெரிய அல்லது நடுத்தர வேறுபாடின்றி முழு விவசாயிகளும் போராட்டத்தில்திரண்டுள்ளனர். விவசாய சட்டம் அமல்படுத்தப்பட்டால், எப்சிஐ மற்றும் விவசாய விளைபொருட்களின் விலைகள் குறையும். நாட்டின் அடிப்படை பகுதிகளான பாதுகாப்பு, ரயில்வே, விமான போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, கல்வி, வங்கித் துறைகள் ஏற்கனவே தனியார்மயமாக்கப்பட்டுள்ளன. அதற்கு எதிராக அதிகரித்து வரும் தொழிலாளர் இயக்கத்தைத் தணிக்க தொழிலாளர் சட்டங்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு மாற்றியது.

இறுதியாக , உணவு தானியத் துறையே கார்ப்பரேட்டுகளுக்கு திறக்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் விவசாயிகள் நடத்திய போராட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்துநரேந்திர மோடியின் முகத்தை காப்பாற்றுவதற்கான ஒரு சூழ்ச்சியாக விவசாயிகள் பார்க்கிறார்கள் என்று பாலகோபால் கூறினார்.

;