india

img

தில்லி விவசாயிகள் போராட்டம் உலக வரலாற்றில் தடம் பதித்துள்ளது... தில்லி பேரணியில் பெ.சண்முகம் பெருமிதம்....

புதுதில்லி:
விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி தலைநகர் தில்லியில் கடந்த 8 மாதகாலமாக விவசாயிகள்தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழக விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர்.

போராட்டத்தின் ஒருபகுதியாகத் தமிழக விவசாயிகள் சார்பில் சிங்குஎல்லையில் சனிக்கிழமை (ஆக. 7) பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர்டி.ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் வரை நடைபெற்ற இந்த பேரணியில் மோடி அரசைக்கண்டித்தும் விவசாயிகள் போராட் டத்தை ஆதரித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்ட பந்தலை அடைந்ததமிழக விவசாயிகளுக்கு ஹரியானா,பஞ்சாப், சண்டிகர், ராஜஸ்தான் விவசாயிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.அங்கு நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண் முகம் பேசுகையில், வேளாண் சட்டத்தைஎதிர்த்து தமிழகத்தில் நாம் பல கட்டப் போராட்டங்கள் நடத்தி வருகிறோம். தில்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க முடியாத நிலையைக் கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியிருந்தது. கடந்த 256 நாட்களாக நடைபெறும் இந்த போராட்டத்தில் தற்போதுதமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கரும்புவிவசாயிகள் சங்கம், மலைவாழ் மக்கள்சங்கங்களைச் சேர்ந்த 1,200 பேர் பங்கேற்றுள்ளனர்.

உலக போராட்டத்திற்கு முன்மாதிரி 
உலக வரலாற்றில் முதல் முறையாக இதுபோன்ற பிரம்மாண்டமான போராட்டத்தை நாங்கள் பார்க்கிறோம். இந்த போராட்டத்திற்குச் செய்யப்பட்ட தயாரிப்புகள் உலக போராட்டத்திற்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது. தமிழக விவசாயிகளுக்கு இந்த போராட்டம்ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான போராளிகளுக்கு உணவு இருப்பிடம், குடிநீர்,மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயாரிப்புப் பணிகள் எங்களுக்குப் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளன. மதம், மொழி, இனம், மாநிலம் என்ற பல்வேறு வேறுபாடுகள் நம்மில் இருந்தாலும் விவசாயி எனும் ஒற்றைச் சொல்லில்இணைந்திருக்கிறோம்.

போராட்டம் ஓயாது
வீரம் செறிந்த இந்த போராட்டத்தில்பங்கேற்கும் வாய்ப்பு தமிழக விவசாயிகளுக்குக் கிடைத்தது பெருமிதமே. தில்லி காவல்துறை கடுமையான அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது. தில்லி ஏதோ புனித பூமி போலவும் இங்குப் போராட்டமே நடக்கக்கூடாது எனவும் மோடி அரசு எண்ணுவது அறிவு முதிர்ச்சி இன்மையைக் காட்டுகிறது.தில்லியைச் சுற்றி 6 மையங்களில் நடந்து வரும் இந்த களப் போராட்டத்தின்ஒரு பகுதியாக சிங்கு எல்லையில் ஒருவாரம் பங்கேற்று இந்த விவசாயப்போராட்டத்தை வலுப்பெறச் செய்யவேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் நோக்கம். தமிழக விவசாயிகள் எந்த பகுதியிலிருந்தாலும் மோடி அரசுஇந்த மோசமான சட்டத்தைத் திரும்பப்பெறும் வரை போராட்டம் ஓயாது.போராட்டக்கடலில் தமிழக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மலைவாழ் மக்கள் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

நிச்சயம் வெற்றிபெறுவோம்
மேலும் 3 வேளாண் சட்டங்களையும், மின்சார சட்ட மசோதாவையும் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் விரோதியான மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் வரை நமது போராட்டம் ஓயாது. உங்கள் போராட்டத்திற்குத் தமிழக விவசாயிகள் தோளோடு தோள் நிற்போம். இந்த வர்க்கப் போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும் என்றார்.இதில் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்ரமணியன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.டில்லிபாபு, மாநில நிர்வாகிகள் சாமி நடராஜன், பி. பெருமாள், என்.பழனிச்சாமி, கோபிநாத், ஆர். செல் லையா, பெருமாள், மாரிமுத்து, துளசிநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;