states

img

இனி மெட்ரோவில் திருமண போட்டோஷூட் நடத்தலாம்! - கொச்சி மெட்ரோ நிர்வாகம் அனுமதி

மெட்ரோ ரயிலில் திருமண போட்டோஷூட் நடத்த கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களின் படப்பிடிப்புகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது திருமண போட்டோஷூட்களுக்கும் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, ஒரு மெட்ரோ ரயில் பெட்டிக்கு அதிகபட்சமாக 2 மணி நேரத்திற்கு முன்பதிவு செய்யலாம் எனவும், நிற்கும் ரயிலுக்கு ரூ.5000  ஓடும் ரயிலுக்கு ரூ.8000 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10 ஆயிரம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.

மேலும், 3 மெட்ரோ ரயில் பெட்டிகள் வேண்டுமானால் நிற்கும் ரயிலில் 2 மணி நேரத்திற்கு ரூ.12 ஆயிரம் செலுத்த வேண்டும். ஓடும் ரயிலுக்கு ரூ.17,500  செலுத்த வேண்டும். வைப்புத் தொகை ரூ.25 000 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

;