திருவனந்தபுரம், டிச.20- மாநகராட்சிக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனவும் பாஜக சம நிலை இழந்து விட்டதாகவும் திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் கூறினார். எந்த ஆத்திர மூட்டலும் இன்றி கட்டி டத்திற்குள் நுழைந்த பாஜக உறுப்பினர்கள் குழு தாக்குதல் நடத்தி யது. முன்பக்க கண்ணாடி கதவு உட்பட உடைக்கப் பட்டு, தார் ஊற்றப்பட்டது. பல சேதங்களை ஏற்படுத்தி யுள்ளனர். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படை யில் மக்கள் விரோதப் போராட்டங்களை மக்களும் நீதிமன்றங்களும் நிராகரித்ததால் பாஜக சமநிலையற்ற நிலையில் உள்ளது. அவர்கள் மீண்டும் சமூக விரோத ஆக்கிரமிப்புக்கு திரும்புவது கவலையளிக்கிறது. தாக்குதலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தலைநகரில் பாஜகவின் ஆக்கிரமிப்பு அரசியலுக்கு மதிப்பில்லை என்பதை மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். மக்கள் ஒன்றுதிரண்டு இதையும் எதிர்கொள்வார்கள். மதவாதத்துடனும் வளர்ச்சிக்கு எதிரானவர்களுடனும் ஒரு அங்குலம்கூட சமரசம் செய்து கொள்ளப் போவ தில்லை என மேயர் தெரிவித்துள்ளார்.