மக்களவைத் தேர்தலில் கேர ளத்தில் 20 தொகுதிகளி லும் இடது ஜனநாயக முன் னணி (எல்டிஎப்) வெற்றி பெறும்.
மோடி எத்தனை முறை வந்தா லும் கேரளத்தில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. பாஜக வுக்கு இங்கு இரட்டை இலக்க வெற்றி கிடைக்கும் என்று சொல்வ தில் எந்த அடிப்படையும் இல்லை. அது தேர்தலுக்குப் பிறகு புரியும். தேர்தல் தேதி எதிர்பார்த்தது போலவே உள்ளது. ஏற்கனவே இடதுசாரிகள் வலுவாக களத்தில் உள்ளனர். ஒன்றிய அரசு, கேர ளத்துக்கான பணத்தை தராத தால், மாநில அரசு நிதி நெருக்கடி யில் உள்ளது. இது மக்களுக்கு தெரியும். அனைத்து ஓய்வூதிய நிலுவைகளும் மாநில அரசுக்கு வர வேண்டிய தொகை கிடைத் ததும் வழங்கப்படும்.
நாட்டை இந்து ராஷ்டிர மாக்கும் பாஜகவின் முயற்சி யை கடுமையாக எதிர்ப்போம். தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெரும் நிதிக் கொள்ளையைச் செய்துள்ளது. வாக்குகளைப் பெறுவதற்காகவே ராமர் கோவில் குறித்து விவாதிக்கப்படுகிறது. அவர்களுடன் சில ஊடகங்களும் நகர்கின்றன. பாஜக இந்து ராஷ்டி ரத்தை நோக்கி பயணிக்கிறது. இதற்கு எதிராக இடதுசாரிகள் இந்த தேர்தல் போராட்டத்தையும் வலுவாக நடத்துவோம்!
கொல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன்