states

img

காவல்துறையின் பணிச்சுமையைக் குறைக்க கேரள அரசு நடவடிக்கை

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காவல் துறையின் பலத்தை அதிகரிக்கவும், பணிச்சுமையை குறைக்கவும் தேவையான நட வடிக்கைகளை அரசு எடுத்து வரு கிறது என்றும் காவல்துறை மீதான  அழுத்தத்தை குறைக்க அனைத்து  நடவடிக்கைகளும் எடுக்கப்படுவ தாகவும் முதல்வர் பினராயி விஜ யன் கூறினார்.

சட்ட சபையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்து பி.சி. விஷ்ணுநாத் எழுப்பிய குற்றச்  சாட்டுக்கு பதிலளித்த முதல்வர்  மேலும் கூறுகையில், பணி அழுத்  தம், குடும்பம் அல்லது மன அழுத் தம் தொடர்பான காரணங்களால் காவல்துறையினர் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்  கப்படும் என்றார். போலீசாருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால்  தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்களின் மன உறுதிக்கு இடை யூறு ஏற்படாமல் அனைவரும் கவன மாக இருக்க வேண்டும்.

காவல்துறை இப்போது ஆபத்து காலத்தில் உதவி செய்கி றது. வெள்ளத்தின் போதும், கோவிட் காலத்திலும் அதைக் காண  முடிந்தது. இது காவல்துறைக்கு புதிய முகத்தை கொடுத்துள்ளது. காவல்துறையை மேலும் உந்து  சக்தியாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். காவல்துறையில் வெளிப்புற தலையீடு இல்லை. காவல் நிலையங்களில் நல்ல வசதி கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்  பதே அரசின் நிலைப்பாடு. எதிர்  கால காலியிடங்களைக் கருத்தில்  கொண்டு ஆட்சேர்ப்பு செய்யப்படு கிறது. போலீசார் விருப்ப ஓய்வு பெற்று செல்வது துறையில் உள்ள  குறைபாடுகளால் அல்ல. ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள்கூட விருப்ப ஓய்வில் செல்கிறார்கள்.

குடும்பப் பிரச்சனைகள், நிதிப்  பிரச்சனைகள், உடல்நலப் பிரச்சனை கள், இதனால் எழும் உளவியல் மோதல்கள் ஆகியவை காவல் துறையினரின் தற்கொலைக்கான பெரும்பாலான காரணங்களாகும். தொழிலில் -வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளும் தற்கொலைக்கு வழிவகுத்துள்ளது. தற்கொலை விகிதத்தை குறைக்க அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது. உரிய  விடுப்பு வழங்குவதற்கும் வாராந்  திர விடுமுறையை கட்டாயமாக்கு வதற்கும் காவல் அதிகாரிகள் சிறப்பு சுற்றறிக்கை மூலம் அறி வுறுத்தப்பட்டுள்ளனர். எட்டு மணி நேர வேலையை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகள் மேற்  கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே  52 நிலையங்களில் செயல்படுத் தப்பட்டுள்ளது. மேலும் பல நிலை யங்களுக்கு விரிவுபடுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கேரளத்தில் 13 புதிய காவல்  நிலையங்கள், 19 சைபர் நிலை யங்கள் மற்றும் நான்கு மகளிர்  நிலையங்கள் தொடங்கப்பட்டுள் ளன. கடந்த எல்.டி.எஃப் ஆட்சி  முதல் காவல்துறையில் 5,670 புதிய  பணியிடங்கள் உருவாக்கப்பட்டு ளன என்றார். முதலமைச்சரின் பதிலைத் தொடர்ந்து ஒத்தி வைப்பு தீர்மானத்துக்கு சபாநாய கர் அனுமதி மறுத்தார். இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி யினர் வெளிநடப்பு செய்தனர்.

;