states

img

டிஜிட்டல் சேவைகளில் கேரள அரசு சாதனை!

டிஜிட்டல் சேவைகளில் முழு மின் ஆளுமை என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது.

கேரள அரசு கல்வி மற்றும் சுகாதாரத்தில் பல முன்னோடி திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.அத்திட்டங்கள் நாட்டிற்கே முன்மாதிரியாகவும் உள்ளது.

அந்த வகையில், தற்போது இந்தியாவின் முதல் ”முழு மின் ஆளுமை” மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது கேரளா;அறிவு சார்ந்த சமூகம் மற்றும் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் இந்த அங்கீகாரம் ஒரு முக்கிய படியாக இருக்கும் என கேரள அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

eDistrict, K-Swift , EHealth, ePDS, ecourt management, ERSS, Pol App, Cyber DOM டிஜிட்டல் சர்வே மிஷன் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களை கேரளா செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.