திருவனந்தபுரம், அக்.1- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று நாள் கேரள மாநில மாநாடு அக்டோபர் 1 (சனிக்கிழமையன்று) துவங் கியது. எஸ். வெளியம் பார்க வன் நகரில் (தாகூர் தியேட் டர்) மாநிலச் செயற்குழு உறுப் பினர் சி.திவாகரன் கொடி யேற்றினார். பொதுச்செய லாளர் டி.ராஜா பிரதிநிதி கள் மாநாட்டை துவக்கி வைக்கிறார். சனிக்கிழமையன்று (அக்.1) மாலை 4 மணிக்கு தாகூர் திரையரங்கில் முதல் வர் பினராயி விஜயன், தமி ழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ‘கூட்டாட்சி மற் றும் ஒன்றிய-மாநில உறவு கள்’ என்ற தலைப்பில் சொற் பொழிவாற்றினர்.