states

img

என்றென்றும் முன்னணியில் நிற்கும் ஏடு

கேரள முதல்வர் பினராயி விஜயன்  வாழ்த்துச் செய்தி

தீக்கதிர் நாளிதழின் 5ஆவது பதிப்பு திருநெல்வேலியிலிருந்து வெளிவர இருப்பதை அறிந்து நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.  தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை முன்னிலைப்படுத்துவதில் தீக்கதிர் என்றென்றும் முன்னணியில் இருந்து வருகிறது; அதன் மூலம் சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் பணியினை உறுதியோடு ஆற்றி வருகிறது.  தீக்கதிரின் புதிய பதிப்பு, முற்போக்கு கருத்துக்களை உறுதியோடு மக்களிடையே எடுத்துச் செல்வதற்கும் வர்க்க மற்றும் வெகுமக்கள் போராட்டங்களுக்கு மேலும் உத்வேகம் அளிப்பதற்கும் இந்தப் பத்திரிகைக்கு கூடுதல் பலம் அளிக்கும் என நம்புகிறேன்.