திருவனந்தபுரம், டிச.25- ரப்பர் விலை தொடர்ந்து சரிந்து விவ சாயிகளின் எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. ஆர்எஸ்எஸ்-4 ரக ரப்பர் வெள்ளியன்று ரூ.132.50க்கு விற்பனையானது. ஆர்எஸ்எஸ்-5 க்கு ரூ 129 50 பைசா, ஐஎஸ்எஸ்-க்கு ரூ 116 விலை கிடைத்தது. ஒட்டுப்பால் விலை கிலோ ரூ.70 ஆக குறைந்துள்ளது. மறுபுறம் ரப்பர் பால் விலையும் குறைந்தது. பொதுவாக ரப்பர் விவசாயிகளுக்கு டிசம்பர் மாதம் மிகவும் லாபகரமானது. நல்ல தெளிவான வானிலை, பனியுடன் காலையில் நிலவும் குளிர், பால் உற்பத்தியை அதிக ரிக்கும். இந்த அதிகரிப்பு நவம்பர் இறுதியில் தொடங்கி ஜனவரி முதல் பாதியில் இலை கள் உதிர்வு வரை நீடிக்கிறது. மழைக்கால பாதுகாப்பு மற்றும் இதர செலவுகள் தேவைப் படாத நேரத்தில், அனைத்து ரப்பர் தோட்டங் களிலும் பால் வடிதல் உச்சநிலையை தொடும். டிசம்பர் மாதம் உற்பத்திச் செலவுகள் குறை வாகவும், வருவாய் அதிகமாகவும் இருக்கும். இந்த எதிர்பார்ப்பு இம்முறை பொய்த்துப் போனதால் ரப்பர் விவசாயிகள் கண்ணீர் வடிக் கிறார்கள். இம்முறை விவசாயிகளிடம் இயற்கை கருணை காட்டவில்லை என்பதும் துயரத்துக்கு காரணமாகிவிட்டது. டிசம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில், குளிர் அடிக்க ஆரம்பித்தது, ஆனால் எதிர்பாராத மழை எல்லாவற்றையும் நிலைகுலையச் செய்தது.
10 நாட்களாக பால் வெட்டுதல் நிறுத்தப்பட்டது. மீண்டும், தொடர்ந்து மழை பெய்ததால், பனியும் குளி ரும் இன்னும் உருவாகவில்லை. இதனால், உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. ஜன வரி நடுப்பகுதியில் துவங்க வேண்டிய இலை களின் உதிர்வு, டிசம்பர் நடுப்பகுதியில் துவங்கி யது. டிசம்பரில் தற்செயலாக பெய்த மழையே இலைகள் சீக்கிரம் உதிர்வதற்கு காரணம் என விவசாயிகள் கருதுகின்றனர். உற்பத்தி குறைந்ததாலும், விலை வீழ்ச்சி யாலும் தட்டுப்பாடு லாபமற்றதாகிவிட்டது. பால் வெட்டுதல் பொதுவாக ஜனவரி நடுப்பகுதி யில் நின்றுவிடும். இம்முறை நஷ்டம் ஏற்பட்ட தால், விவசாயிகள் பால் வெட்டுவதை முன்கூட் டியே நிறுத்தி விட்டனர். ஒன்றிய அரசின் தடையற்ற இறக்குமதி கொள்கை விவசாயிகளை கடுமையாக பாதித் துள்ளது. பெரிய டயர் லாபிக்கு லாபம் ஈட்ட விவசாயிகள் பலியாக்கப்படுகின்றனர். உற் பத்திச் செலவு குறைந்த நாடுகளில் இருந்து ரப்பர் ஷீட்களை வாங்கி, இந்திய சந்தையில் குவியும் நிலையை உருவாக்கி, ரப்பர் விலையை முடிந்தவரை குறைத்து வாங்குவது டயர் லாபிகளின் வியாபார உத்தி. அன்றாடச் செலவுக்கு ரப்பரை மட்டுமே நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான சிறு விவசாயிகள் இத னால் பாதிக்கப்படுகின்றனர்.