states

img

பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றல்

கேரளாவில் மாணவர்களின் இடைநிற்றல் குறித்து விரி வான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்  பிக்குமாறு பட்டியல் பழங்குடியினர் மற்றும்  கல்வித் துறைகளுக்கு அமைச்சர்  ஓ.ஆர்.கேளு உத்தரவிட்டுள்ளார்.

பழங்குடியினப் பகுதிகளில் மாணவர்களின் இடைநிற்றல் குறித்து பாலக்காடு மாவட்ட வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் தெரி விக்கப்பட்ட கவலைகளின் பின்ன ணியில் அமைச்சர் இந்த அறிக்கை யை கேட்டுள்ளார். தொடக்க நிலை, நடுநிலை அள வில், பழங்குடியின மாணவர்கள் குறித்த ஆய்வு பலப் படுத்தப்பட வேண்டும். மக்கள் எழுதவும் படிக்கவும் தெரிந்திருப்பதை உறுதிசெய்து நீண்ட காலக் கண் ணோட்டத்துடன் திட்டங்களைச் செயல்படுத்த வேண் டும் என்றும் அமைச்சர் பரிந்துரைத்தார்.

மழைக்காலம் தீவிரமடைந்து வருவதால் மாவட்டத்  தில் சிறப்பு கவனம் தேவை. வெள்ளம் பாதித்த பகுதி களில் இருந்து மக்களை உடனடியாக வெளியேற்ற நட வடிக்கை எடுக்குமாறு கிராம அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். மனித-வனவிலங்கு மோதல்  தொடர்பாக தயாரிக்கப்பட்ட டிபிஆர் மறுஆய்வு செய்  யப்பட வேண்டும். வனவிலங்குகள் மக்கள் குடியிருப்பு களுக்குள் இறங்காத வகையில், வனப்பகுதியில் பழ மரங்கள் மற்றும் நீர்வளத்தை உறுதி செய்வதற்கான திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

;