states

img

பாஜக ஊழியர் சந்தீப் நாயருக்கு மன்னிப்பு.... தங்கக் கடத்தலில் குற்றப்பத்திரிகை தாக்கல்....

கொச்சி:
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் நான்காவது குற்றவாளியும், பாஜக ஊழியருமான சந்தீப் நாயர், அரசு தரப்புக்கு சாட்சி சொல்லும் குற்றவாளியாக (அப்ரூவர்) தெரிவித்து முதலாவது குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்துள்ளது.

திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக யுஏஇ தூதரக பாதுகாப்புடன்கூடிய பார்சலில் 2020 ஜுலை 5 இல் தங்கம் கடத்தி வரப்பட்டது. சுமார் ரூ.14 கோடி மதிப்புள்ள இந்த தங்கத்தை சுங்கத்துறையினர் முடக்கிவைத்து விசாரணை நடத்தினர். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கை களுக்கு உதவும் நோக்கத்துடன் கடத்திவரப்பட்டதாக கூறி தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) இந்த கடத்தல் குறித்த விசாரணையை தொடர்ந்தது. யுஏஇ தூதரக முன்னாள் ஊழியர்களான சொப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர், கே.டி.ரமீஸ் ஆகியோர் 6 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சந்தீப் நாயர் முக்கிய புள்ளியாக சேர்க்கப்பட்டார். ஸ்வப்னா சுரேஷ், சரித், கே.டி.ரமீஸ் உள்ளிட்ட 20 குற்றவாளிகள் மீது தற்போது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் முன்னாள் தகவல் தொழில்நுட்ப செயலாளர் எம்.சிவசங்கரின் பெயர் குறிப்பிடப்படவில்லை, அவர் புலனாய்வு அமைப்பு களால் பலமுறை விசாரிக்கப்பட்டார்.

கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரியான துணை காவல் கண்காணிப்பாளர் சி.ராதாகிருஷ்ண பிள்ளை இந்த குற்றப்பத்திரி கையை தாக்கல் செய்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் ஆகும் நிலையில் இயல்பாக ஜாமீன் பெறுவதைத் தடுக்கும் வகையில் என்ஐஏ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. முன்னதாக, என்ஐஏ குற்றம் சாட்டிய 12 பேரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. முக்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளானஸ்வப்னா, சந்தீப் நாயர் ஆகியோர் ஜூலை 11அன்று பெங்களூரில் என்ஐஏ கைதுசெய்தது.இந்த வழக்கில் யுஏபிஏ சட்டத்தின்16,17,18,20 பிரிவுகள் பொருந்தும் எனகுற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. நாட்டின் நிதி பாதுகாப்பை தகர்க்கவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டவும் அவர்கள் சதி செய்ததாக கூறப்பட்டுள்ளது. பஹ்ரைன், சவூதி அரேபியா,மலேசியாவிலிருந்து தங்கம் கடத்த திட்டங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இது ஆரம்ப குற்றப்பத்திரிகையாகும். மற்ற குற்றவாளிகள் கைது செய்யப்படும்போது மேலும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். இந்த வழக்கில் 30 க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் உள்ளனர். 21 பேர் கைது செய்யப்பட்டனர். ஏழு பேர் நீதிமன்றக்காவலில் உள்ளனர். எட்டு பேர் வெளிநாடு உட்பட தலைமறைவாக உள்ளனர். இதில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட பைசல் பரீத்தும் வெளிநாட்டில் உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களில், முவாட்டுபுழாவைச் சேர்ந்த ராபின்ஸ் மட்டுமே யுஏஇயிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு கைது செய்யப்பட்டார்.

;