திருவனந்தபுரம், மார்ச் 11- வனவிலங்குகள் ஊடுருவலை தடுக்கவும், மனித பாதுகாப்பை உறுதி செய்யவும் கேரளத்தின் முன்மொழிவு களுடன் ஒத்துழைக்க கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஒப்புக்கொண்டுள்ளன. மனித - வனவிலங்கு மோதலை குறைக்கும் வகையில், மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு சாசனத்தில் கேரளா மற்றும் கர்நாடக அமைச்சர்கள் கையெழுத்திட்டனர்.
அந்த ஒப்பந்தத்தில் தமிழகமும் இணைகிறது. கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனத் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கேரள வனத்து றை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் மற்றும் கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த கூட்டத்தில் தமிழக அமைச்சர் எம்.மதிவேந்தன் கலந்து கொள்ளாத நிலையில், ஒப்பந்தத்தில் தானும் அங்கம் வகிப்பதாக தெரிவித்தார்.
வனவிலங்கு மோதல்களில் சிக்கித் தவிக்கும் மக்களின் உயிரைப் பாதுகாக்க மத்திய சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் கூட்டத்தில் தெரிவித்தார். வனவிலங்கு களின் ஊடுருவலை தடுக்க ஒன்றிய அரசு தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக, தமிழக பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனவிலங்குகள் ஊடுருவல் அதிகரித்து ள்ள நிலையில், தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுடன் இணைந்து பிரச்சனைக்கு தீர்வு காண கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடத்தப்பட்டது.
தமிழகம் உள்ளிட்ட 3 மாநில அதிகாரிகள் கூட்டம் பலமுறை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பரஸ்பர ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தை அமைச்சர்கள் குழு உருவாக்கியது. வனவிலங்கு- மனித மோதல் வலையங்களில் கூட்டுப் பணி களை விரைந்து செயல்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.
மூன்று மாநிலங்களும் ஒத்து ழைப்பை உறுதி செய்வதற்காக நோடல் அதிகாரிகளை நியமிக்கும். கோரிக்கை களை நிறைவேற்ற மூன்று மாநிலங்களும் கூட்டாக ஒன்றிய அரசை அணுகும். விரை வான தலையீடு மற்றும் ஒருங்கிணைப்புக் காக மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்படும். கூட்டத்தில் கேரள கூடுதல் தலைமைச் செயலாளர் கே.ஆர்.ஜோதிலால், முதன்மை வனப் பாதுகாவலர் கங்காசிங் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.
ஒன்றிய அரசின் பொறுப்பு: கர்நாடக அமைச்சர்
வனவிலங்குகளின் ஊடுருவலை திறம்பட தடுக்க ஒன்றிய அரசு முக்கிய தடை யாக உள்ளது என்று கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே கூறினார். திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசு நிதி உதவி செய்வதில்லை. வேலி அமைக்க ஒன்றிய அரசின் உதவி இல்லை. இப்படி இருந்தால் யானைகள் மற்றும் பிற விலங்குகள் நாட்டிற்குள் நுழைவதை எவ்வாறு தடுப்பது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
குறிக்கோள்கள்
• மனித-வனவிலங்கு மோதல் மண்டலங்களை வரையறுத்தல், வனவிலங்கு தொந்தரவுக்கான கார ணங்களை கண்டறிதல் மற்றும் தணிக்கும் உத்திகள்.
• தாமதங்களைத் தவிர்க்க விரைவான தலையீடு.
• வள ஒத்துழைப்பு, விரைவான தகவல் பரிமாற்றம் மற்றும் நிபுணர் சேவையை உறுதி செய்தல்.
• வள மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல்.
ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பு
• ஒரு நோடல் அதிகாரி
• மாநிலங்களை இணைக்க உதவி நோடல் அதிகாரிகள்
• ஒரு ஆலோசனைக் குழு (மூன்று மாநிலங்களின் உறுப்பினர்கள்)
• சிக்கல் உள்ள பகுதியில் தலையிட பணிக்குழு