states

img

கேரளத்தில் கூடுதலாக 510 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமிப்பு.... தணிக்கைக் குழுக்கள் அமைத்து கண்காணிப்பு... மாநில, மாவட்ட அளவில் ஏற்பாடுகள் தீவிரம்....

திருவனந்தபுரம்:
நோயாளிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 30,000 க்கும் மேலாக அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா சிறப்பு உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டியுள்ளார். செவ்வாயன்று நடந்த இந்த கூட்டம், ஏற்கனவே சுகாதாரத் துறையின் முதன்மை செயலாளர் தலைமையில் நடந்த மாவட்ட அளவிலான அதிகாரிகளின் கூட்டத்தின் தொடர்ச்சியாகும்.

இந்த கூட்டத்தில், மாநிலத்தில் தினசரி ஆக்சிஜன் உற்பத்தி, விநியோகம், பயன்பாடு மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும்போது தேவையான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது, 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அரசுமருத்துவமனைகளில் கிடைக்கிறது. கோவிட் சிகிச்சை மற்றும்கோவிட் அல்லாத சிகிச்சை ஆகியஇரண்டிற்கும் சுமார் 100 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. விநியோகத்துக்குப் பிறகும், உற்பத்தி மையங்களில் 510 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருப்புஉள்ளது. எந்தவொரு பாதகமானசூழ்நிலையையும் தாங்குவதற் காக கையிருப்பை 1000 மெட்ரிக் டன் ஆக உயர்த்துவதற்கான பல்வேறு சாத்தியக்கூறுகள் குறித்துகூட்டத்தில் குறிப்பாக விவாதிக் கப்பட்டது.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் விகிதத்தில்மாவட்டங்களில் அமைக்கப் பட்டுள்ள சிகிச்சை மையங்களின் தேவைக்கு ஏற்ப ஆக்சிஜன் கிடைக்கச் செய்வதில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சாத்தியமான மாற்றுவழிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கிடைக்கக் கூடிய ஆக்சிஜனை மிகவும் திறமையாக பயன்படுத்த மாநில, மாவட்ட மருத்துவமனை மட்டங்களில் ஆக்சிஜன் தணிக்கைக் குழுக்கள் அமைக்கப்படும். சிகிச்சை மையங்களை தொடர்புகொண்டு ஆக்சிஜன் கசிவைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கையாளும்அதிகாரிகளுக்கு சரியான நேரத்தில் பயிற்சித் திட்டத்தை ஒருங்கிணைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

திரவ ஆக்சிஜன் தொட்டிகள்தற்போது பல மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுக்கான அங்கீகாரத்தில் சிக்கல் உள்ளது. இதுகுறித்து பிஇஎஸ்ஓ அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆக்சிஜன் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. நாடுமுழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் கள் கிடைப்பதில் ஏற்படும் பற்றாக்குறையை கருத்தில் கொண்டுதொழில்துறை பயன்பாட்டிற்கான மொத்த ஆக்சிஜன், நைட்ரஜன், ஆர்கான் சிலிண்டர்களை கைப்பற்றவும், அவற்றை காற்று பிரிப்புஅலகு மூலம் விரைவில் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களாக மாற்றி பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் கொண்டு செல்லும்டேங்கர்களுக்கு பொது சாலைகளில் ஆம்புலன்ஸ்களுக்கு அளிப்பது போன்று அதே முன்னுரிமை அளித்து கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகளை அமல் படுத்த மாநிலத்தில் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.ஆக்சிஜன் ஒழுங்குமுறை ஆணையராக உள்ள பிஇஎஸ்ஓ தென்னிந்திய தலைவர் டாக்டர் வேணுகோபால் நம்பியார், சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராஜன் என்.கோப்ரகடே, என்எச்எம் மாநில மிஷன் இயக்குநர் டாக்டர். ரத்தன் கேல்க்கர், கேஎம்எஸ்சிஎல் நிர்வாக இயக்குநர் டாக்டர். திலீப், மாவட்ட ஆட்சியர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

;