கண்ணூர் வயநாடு பேரிடரால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவுவதற்காக கண்ணூரைச் சேர்ந்த 3ஆம் வகுப்பு மாணவர் நிரவ் கிருஷ்ணா, 8ஆம் வகுப்பு மாணவர் நிஷால் கிருஷ்ணா ஆகியோர் தனது தங்க மோதிரத்தை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து நிஷால் கிருஷ்ணா கூறு கையில்,”அப்பாகிட்ட வயநாட்டில் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய ணும்னு கேட்டேன். அவங்களுக்கு உதவ ணும்னு அவரும் சொன்னாரு.. நான் என்ன செய்ய என்று கேட்டேன். அப்பாவுக்கு வேலையே இல்லையே என்றார். அப்போ தான் எனக்கு அலமாரியில் இருந்த தங்க மோதிரம் நினைவுக்கு வந்தது. அப்பாவி டமும் அம்மாவிடமும் கூறினேன். அவர்க ளுக்கும் அதில் முழு விருப்பம் என்பதை தெரிவித்தனர். என்னுடைய மற்றும் சகோதரனுடைய 3 மோதிரங்கள், அம்மா வின் ஒரு மோதிரம் என 4 மோதிரங்களை நிவாரண நிதிக்கு ஒப்படைத்தோம்” என கூறியுள்ளார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் வி.கே.சனோஜ் சமூக வலைதளங்களில் இந்த பிஞ்சு மனங் களின் நிதியுதவி அளிக்கும் கவலையைப் பகிர்ந்து கொண்டார்.