states

img

கேரளத்தில் 27 ஆவது உலக திரைப்பட விழா முதல் நாளில் 5000 பிரதிநிதிகள் பதிவு

திருவனந்தபுரம், நவ.12- கேரள மாநில திரைப்பட அகாடமி ஏற்  பாட்டில் டிசம்பர் 9 முதல் 16 வரை திரு வனந்தபுரத்தில்  நடைபெற உள்ள 27 ஆவது சர்வதேச திரைப்பட விழாவுக்கான பிரதிநிதிகள் பதிவுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. கோவிட் காலத்தில் நடத்தப்பட்ட இரண்டு விழாக்களைப் போலல்லாமல், வெள்ளியன்று (நவ.12) பதிவு துவங்கிய சில மணிநேரங்களில் 5000 க்கும் மேற்  பட்டோர் பிரதிநிதிகளாக பதிவு செய்யப்பட்  டனர். பதிவு செய்த முதல் ஒரு மணி  நேரத்திலேயே மாணவர்களின் சுறுசுறுப் பான பங்கேற்பு வெளிப்பட்டது. இவ்விழா வில் மாணவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில், இம்முறையும் மாணவர் பிரிவினருக்கு இரட்டை அனு மதிச் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 14 திரையரங்குகளில் நடக்கும் விழா வில் 11,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள்  பங்கேற்கலாம். www.iffk.in  என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பதிவு செய்யலாம். அரசு நிர்ணயித்  துள்ளபடி பொதுப்பிரிவினருக்கு 1,000 ரூபா யும், மாணவர்களுக்கு 500 ரூபாயும் பிரதி நிதி கட்டணம். தாகூர் திரையரங்கில் ஏற்பாடு  செய்துள்ள பிரதிநிதி செல்லில் நேரடியாக வும் பதிவு செய்யலாம். எட்டு நாட்கள் நடை பெறும் இக்கண்காட்சியில் ஆசிய, ஆப்பி ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் திரைப்  படங்களின் சர்வதேசப் போட்டிப் பிரிவு, சமகாலத் திரைப்படத் தயாரிப்பாளர்களின் சமீபத்திய படங்கள், பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்ற சுமார் 180 படங்கள் காட்சிப்படுத்தப்படும்.