states

img

வந்தே பாரத் ரயில் 2 மாதத்தில்  4 வது முறையாக விபத்து

வந்தே பாரத் ரயில் கடந்த 2 மாதத்தில் 4வது முறையாக விபத்துக்குள்ளாகி உள்ளது. வந்தே பாரத் ரயில்கள் அதி வேகமாக செல்வதும், அவ்வப்போது மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி விட்டது.

இந்தியாவில் ரயில்களின் சேவையை மேம்படுத்தும் நோக்கத்திலும், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு செய்வதை கொண்டாடும் வகையில் 75 நகரங்களை இணைக்கும் வகையில் ஒன்றிய அரசு சார்பில் வந்தே பாரத் விரைவு ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது.  சென்னை-மைசூர் உள்பட நாட்டில் 5 வழித்தங்களில் வந்தே பாரத் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

குஜராத் மாநிலம் காந்திநகர்-மும்பை இடையே இயங்கும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

வியாழனன்று மாலை குஜராத் மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வந்தே பாரத் ரயில் மாடு மீது மோதியது. இதனை அடுத்து வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது .உடனடியாக அந்த ரயில் சர்வீஸ் செய்யப்பட்டு கிளம்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே 3 ரயில்கள் மீது மாடு மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.  தொடர்ச்சியாக வந்தே பாரத் ரயில் மீது மாடுகள் மோதி விபத்து ஏற்படுவதும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

;