states

img

குஜராத் பல்கலைக்கழகத்தில் பசு ஆராய்ச்சிப் படிப்பு வினாத்தாள் கசிவை தடுக்க ஜோதிடம் மூலம் ஆலோசனை

பாஜக ஆளும் குஜராத் மாநிலம்  சூரத்தில் உள்ளது வீர்  நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகம் (VNSGU). இது குஜ ராத் மாநிலத்தில் முக்  கிய பல்கலைக்கழ கங்களில் ஒன்றாகும்.

இந்நிலையில், விஎன்எஸ்ஜியு பல்க லைக்கழகத்தில் நிகழ்ந்து வரும் வினாத்  தாள் கசிவு, தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு மற்றும் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டி டம் கட்டுவதற்கு ஜோதிடம் மூலம் ஆலோ சனை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி யுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின்படி வகுப்ப றைகளை மாற்றினால் வினாத்தாள் கசிவு  தடுக்கப்பட்டு, தேர்ச்சி விகிதத்தை அதிக ரிக்கலாம் என ஜோதிடர் கூற அதற்கான ஏற்  பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் துவங்கியுள்ளது. அதே போல ஜோதிடர் அறிவிப்பின்படி புதிய கட்டிடம் கட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்ட பின் கட்டுமானப் பணி களுக்கு முதல் தவணையாக ரூ.30 கோடி யை ஒதுக்கியுள்ளது குஜராத் பாஜக அரசு.

பசு ஆராய்ச்சி

கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகு பயோடெக்னாலஜி துறையின் கீழ்  விஎன்எஸ் பல்கலைக்கழகத்தில் “காம தேனு இருக்கை (Kamadhenu chair)” என்ற பெயரில் ஆராய்ச்சிப் படிப்பு துவங்க குஜராத் அரசு திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. “காம தேனு இருக்கை” படிப்பு மூலம் பசு சார்ந்த  ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என பெய ரிட விரும்பாத விஎன்எஸ் பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

வினாத்தாள் கசிவை தடுக்க பலத்த  பாதுகாப்பும், தேர்ச்சி விகிதம் அதிகரிக்க  மனப்பாடம் சார்ந்த ஆலோசனையும், புதிய  கட்டிடம் கட்ட இடம் கண்டுபிடிக்க பொறியா ளர் மூலம் ஆய்வு மேற்கொள்வதே வழக்க மான நடைமுறை ஆகும். ஆனால் ஜோதிடர்  மூலம் வினாத்தாள் கசிவை தடுக்க, தேர்ச்சி  விகிதம் அதிகரிக்க, புதிய கட்டிடம் கட்ட  இடம் கண்டுபிடிக்க ஜோதிடரை களமிறக்கி  கல்வித்துறையில் இந்துத்துவா நிகழ்ச்சி  நிரலை நிகழ்த்தியுள்ளதற்கு சமூகவலைத் தளங்களில் கண்டனங்கள் குவிந்து வரு கின்றன. அதே போல ஏற்கெனவே கால்  நடை மருத்துவப் பிரிவில் மாடு தொடர்பாக  பல்வேறு ஆராய்ச்சிப் படிப்புகள் உள்ளன.  ஆனால் இந்துத்துவா அரசியல் ஆதாயத்  திற்காக பசு  ஆராய்ச்சிப் படிப்பால் என்ன  பலன் கிடைக்கும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.