states

img

கர்நாடக தேர்தல்: 119 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், 119 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 

கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே 10-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 73.19 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில்,  சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 11 மணி நிலவரப்படி, 119 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பாஜக 72 தொகுதிகளிலும், ஜனதா தளம் 25 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. 
பெரும்பான்மையை பெற 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.