states

img

கர்நாடகாவில் எச்3என்2 தொற்றால் ஒருவர் உயிரிழப்பு!

கர்நாடகாவில் எச்3என்2 வைரஸ் தொற்று காரணமாக 82 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் புதிய எச்3என்2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 90 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் துணை வகையான எச்1என்1 வைரசால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் ஆசானில் புதிய வகை எச்3என்2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று காரணமாக 82 வயது முதியவர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அந்த முதியவர் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மார்ச் 1-ஆம் தேதி அவர் உயிரிழந்துள்ளதுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட அவரது ரத்த மாதிரியில் எச்3என்2 தொற்று இருப்பது கடந்த மார்ச் 6-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.