states

img

கர்நாடகாவில் 3 ஆயிரம் கொரோனா நோயாளிகளை காணவில்லை... தொற்று வேகமாக பரவும் அபாயம்...

பெங்களூரு 
நாட்டில் கொரோனா வேகமாக பரவும் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகத்தில் தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கு மேல் உள்ளது.    புதிய உச்சமாக கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் (ஏப்ரல் 28) 39,830 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் பெங்களுருவில் மட்டும் 17,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் மொத்தம் 180 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஏற்கெனவே அம்மாநில மக்கள் கொரோனாவின் மோசமான பரவலை கண்டு நடுங்கி வரும் நிலையில், அம்மாநில பாஜக அரசு மீண்டும் ஒரு அதிர்ச்சி செய்தியை கூறியுள்ளது. இந்த செய்தி அம்மாநில மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிவிப்பு யாதெனில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். அதாவது சிகிச்சைக்கு வராமல், சிகிச்சையில் இருந்தோர் என பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களை பற்றிய இந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த தகவலை அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர். அசோக் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு கர்நாடக மக்களிடையே கடும் பீதியை உருவாகியுள்ளது.  

;