states

img

ஒடிசாவில் மீண்டும் சரக்கு ரயில் விபத்து!

ஒடிசாவின் பார்கார் பகுதியில் சுண்ணாம்பு கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே ஜூன் 2-ஆம் தேதி, மூன்று ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் 275 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், மேலும் ஒரு சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பார்கார் பகுதியில் சுண்ணாம்பு கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் உயிர்சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.