states

img

மழையைக் கூட்டவும் குறைக்கவும் ‘செயலி’ தயாரித்து வருகிறோம்... உத்தரகண்ட் பாஜக அமைச்சர் காமெடி....

டேராடூன்:
மழையின் அளவைக் கூட்டவும்குறைக்கவும் ‘செயலி’ கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக பாஜக அமைச்சர் பேசியிருப்பது சமூகவலைதளங்களில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்ட் மாநில உயர்கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் தன்சிங் ராவத். உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவரும் நிலையில், கடந்த திங்களன்று தன்சிங் ராவத், உள்ளூர் செய்திச் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போதுதான், “இப்போது ஒருசெயலி வெளிவந்துள்ளது. இதன் மூலம் கனமழை பெய்யும் மற்றும் உயிர்மற்றும் சொத்துக்களுக்கு சேதம்விளைவிக்கும் என்று எதிர்பார்க்கப் படும் இடத்தில் மழையின் தீவிரத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்” என்று கூறியுள்ளார்.மேலும், “நான் விரைவில் இதுகுறித்து விளக்கக்காட்சி அளிக்கிறேன்... இந்த செயலி நாட்டின் பலமாநிலங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்” என்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.பாஜக அமைச்சரின் இந்தப் பேச்சுசமூகவலைதளங்களில் கடும் விமர் சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. முன்கூட்டியே மழையின் அளவை அறிய ஏற்கெனவே கருவிகள் இருக்கின்றன. ஓராண்டுக்கான மழைப் பொழிவு விவரங்களைக் கூட முன் கூட்டியே அறிந்து வருகிறோம். எனவே,அதற்கான செயலி என்பது புதிதல்ல.ஆனால், குழாயில் வரும் தண்ணீரைதிறந்து விடுவதையும் பின்னர் மூடுவதையும் போல “ஒரு இடத்தில் பெய்யும் மழையைக் குறைக்கவும், கூட்டவும் செயலி கண்டுபிடித்துள்ளோம்” என்று கூறியிருப்பதைத்தான் ஏற்க முடியவில்லை என்று பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.“தன்சிங் ராவத் போன்றவர்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறார்கள்.. இப்படியெல்லாம் இவர்களுக்கு சொல்லிக் கொடுப்பவர்கள் யார்?” என்றும் பலர் தலையில் அடித்துக் கொண்டுள்ளனர்.“இந்த கண்டுபிடிப்புக்காக தன்சிங்ராவத்திற்கு கட்டாயமாக ‘பாரத் ரத்னா’விருதுதான் கொடுக்க வேண்டும்” என்று உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரீஷ் ராவத் கிண்டலடித்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரும், தன்சிங்ராவத்தின் பேச்சு குறித்து விமர்சனங் களை வைத்துள்ளனர்.

;