states

img

12 ஆண்டுகளில் 7 முறை முதல்வர்கள் மாற்றம்... பாஜகவின் விளையாட்டுத் திடல் ஆகிப்போன உத்தரகண்ட்.....

டேராடூன்:
உத்தரகண்ட் மாநில முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத்கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனதுபதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, தீரத் சிங் ராவத் புதிய முதல்வராக பதவியேற்றார். ஆனால், வெள்ளிக்கிழமையன்று தீரத் சிங் ராவத்தும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.அடுத்ததாக சத்யபால் மகாராஜ்அல்லது தன்சிங் ராவத் ஆகியோரில்ஒருவர் புதிய முதல்வராக பதவியேற்பார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நடவடிக்கை மூலம் ஆளும்பாஜக கட்சியானது, உத்தரகண்டைமீண்டும் தனது அரசியல் விளையாட்டுக் களமாக மாற்றியுள்ளது.உத்தரகண்ட் மாநிலத்தில் 2000-ஆவது ஆண்டு முதல் பாஜக இதுவரை 12 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால், இந்த 12 ஆண்டுகளில் 7 பேர்களை முதல்வர் ஆக்கியும்- நீக்கியும் மக்களாட்சி மாண்பை,பாஜக கேலிக் கூத்தாக்கியுள்ளது.2000-ஆவது ஆண்டில், உத்தரகண்ட் தனி மாநிலமாக பிரிந்தபோது, தங்களுக்கிருந்த எம்எல்ஏ-க்களின்எண்ணிக்கை காரணமாக ​நித்யானந்த் என்ற சாமியாரை முதன்முறையாக பாஜக முதல்வர் ஆக்கியது.ஆனால் ஓராண்டு நிறைவடைவதற்கு முன்னரே, 2001 அக்டோபரில் சாமியார் நித்யானந்த்தை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக பகத்சிங் கோஷ்யாரியை முதலமைச்சராக நியமித்தது. 2002 சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பாஜக இந்த முடிவை எடுத்ததாக அப்போது கூறப்பட்டது.

ஆனால், 2002 தேர்தலில் பாஜகதோற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. என்.டி. திவாரி எனப்படும் காங்கிரசின் மூத்தத் தலைவரான நாராயண் தத் திவாரி முதல்வராக பதவியேற்றார். தனது ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்த, உத்தரகண்ட்டின் ஒரே முதல்வர் அவர்தான். அந்த நேரத்தில் காங்கிரசின் மாநிலத் தலைவராக இருந்த ஹரீஷ் ராவத், என்.டி. திவாரிக்கு எதிராக பல சந்தர்ப்பங்களில் தனது அதிருப் தியை வெளிப்படுத்தி இருந்தாலும், என்.டி. திவாரி வெற்றிகரமாக அதனை எதிர்கொண்டு ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டார்.

2007-இல் பாஜக மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இம்முறை மேஜர் ஜெனரல் பி.சி. கந்தூரியை முதல்வராக நியமித்தது. வழக்கம் போல இரண்டு ஆண்டுகள்தான். பல எம்எல்ஏ-க்கள் கந்தூரி மீது கோபமாக இருப்பதாக கூறி, அவரை மாற்றிய பாஜக, 2009 ஜூனில் ரமேஷ்பொக்ரியால் நிஷாங்கை கொண்டுவந்தது. மலைப்பிரதேச மாநிலத்தின்பிராமண முகமாக அவரை அறிமுகப்படுத்தியது. எனினும் 2012 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தபோது, 2011 செப்டம்பரில் மேஜர் ஜெனரல் பி.சி. கந்தூரியையே மீண்டும் மாநில முதல்வராக்கியது. ஆயினும் 2002 வரலாறு மீண்டும் திரும்பியது. 2012 தேர்தலில் பாஜகதோற்றும் போனது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. விஜய் பகுகுணா முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால், பாஜகவின் நோய் இந்த
முறை காங்கிரசைப் பீடித்தது. 2013-இல் கேதார்நாத்தில் பயங்கரமான வெள்ளம் ஏற்பட்டபோது, ​​முதல்வர் விஜய் பகுகுணா சரியாக செயல்படவில்லை என்று கூறி, காங்கிரஸ் ஹரீஷ் ராவத்தை புதிய முதல்வராக்கியது. ஆனால், 2014-இல் மத்தியில் ஆட்சியில் வந்த பாஜக அரசு,காங்கிரஸ் கட்சியை இரண்டாக்கி, ராவத்தின் ஆட்சியை முடக்கியது. குடியரசுத் தலைவரின் ஆட்சியையும் அமல்படுத்தியது. எனினும், குடியரசுத் தலைவர் ஆட்சி செல்லாதுஎன்று உத்தரகண்ட் உயர் நீதிமன் றம் துவங்கி உச்ச நீதிமன்றம் வரைசென்று ஹரீஷ் ராவத் தனது ஆட்சியை நிலைநாட்டினார்.

எனினும் காங்கிரசை பலவாறாக உடைத்த பாஜக, 2017-இல்ஒருவழியாக மறுபடியும் ஆட்சிக்கு வந்தது. திரிவேந்திர சிங் ராவத் முதல்வராக பதவியேற்றார். இம் முறை பாஜக முதல்வர் ஒருவர் உத்தரகண்டில் நான்காண்டுகளை தொட்டார். 3 ஆண்டுகள் 357 நாட்கள் முதல்வராக தொடர்ந்தார். ஆனால், இம்முறையும் பாஜக சும்மா இல்லை. திரிவேந்திர சிங் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுவதாக கூறி, 2021 மார்ச் 10 அன்று அவரை நீக்கிவிட்டு, தீரத் சிங் ராவத்தை முதல்வராக்கியது. ஆனால், பதவியேற்ற நான்கே மாதங்களில் (115 நாட்கள்) தீரத் சிங் ராவத்தும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தீரத் சிங் ராவத் முதல்வராக பதவியேற்றபோது எம்எல்ஏ-வாகஇல்லை. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இதனால் முதல்வரான 6 மாதங்களுக்குள் அவர் எம்எல்ஏ ஆக வேண்டும். ஆனால், சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நெருங்கிவிட்ட நிலையிலும், தற்போதைய கொரோனா தொற்றுப் பரவல்அபாயத்திற்கு இடையிலும் இடைத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அரசியலமைப்பு நெருக்கடியைக் கருத்தில் கொண்டுமுதல்வர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தீரத் சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

பதவியை ராஜினாமா செய்த தீரத் சிங் ராவத், முதல்வராக இருந்த4 மாத காலத்திற்கு உள்ளாகவே, பல்வேறு சர்ச்சைக் கருத்துக்களை பேசி பிரபலமாகிப் போனவர். “பகவான் ராமர், கிருஷ்ணரின் அவதாரம்தான் பிரதமர் நரேந்திர மோடி; மக்கள் அவரை விரைவில் கடவுளாக ஏற்றுக் கொள்வார்கள்” என்று கூறியதோடு, “பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து முழங்கால்களைக் காட்டுவதால்தான் சமூகம் சீர் கெட்டுப் போகிறது; ஜான்சி ராணிலட்சுமி பாய் போன்றோர். போருக்கேபுடவை அணிந்துதான் சென்றார்கள்”என்றும் நேரில் பார்த்தது போலபேசினார். “இந்தியாவை அமெரிக்கா 200 ஆண்டுகள் அடிமைப் படுத்தி வைத்திருந்தது” என்று புதிய வரலாற்றுத் தகவலை அவர் கூறியபோது நாடே அதிர்ந்து போனது. 20 குழந்தைகளைப் பெற்றால், அதிக ரேசன்பொருள் பெறலாம் என்று மக்களின் வறுமையைக் கேலி செய்து கடும் கண்டனங்களும் தீரத் சிங் ராவத் ஆளானார்.

;