states

img

கடத்தல் தொழிலில் போலீசார்

பாஜக ஆளும் அசாம் மாநிலத்தின் கச்சார் மாவட் டத்தில் உள்ள டிகோர்கால் பகுதியில் அசாம் - மேகாலயா மாநிலங்களுக்கு இடையேயான எல்லையை கண்காணிக்கும் முக்கிய சோதனைச் சாவடி உள்  ளது. இந்த சோதனைச் சாவடியில்  பாதுகாப்பு பணியில் இருந்த அசாம் போலீசார்கள் கடத்தல் காரர்களிடம் குறிப்பிட்ட தொகை களை பெற்று மேகாலயாவில் இருந்து கடத்தி கொண்டு வரப்  படும் பருத்தி, கடலை, பருப்பு உள்  ளிட்டவைகளை அசாம் மாநி லத்திற்குள் அனுமதித்துள்ளனர்.

சில நேரங்களில் அசாம் போலீசாரே தங்களது வாக னங்களில் கடத்தல் பொருட்களை கச்சார் சந்தைகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். பொதுமக்கள், வியாபாரிகளின் புகாருக்கு பின்னரே கச்சார் எஸ்பி கடத்தல் தொழில் ஈடுபட்ட 5 போலீசார்களை இடைநீக்கம் செய்ய உத்தர விட்டுள்ளார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் போலீசார் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவது வாடிக்கையாகி விட்டது. சமீ பத்தில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜ ராத்தில் கடத்தல் மதுபானங்களை கைப்பற்றி போலீசார் அதனை பார்களில் விற்ற சம்பவம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.