உத்தரகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரகண்டின் டேராடூனில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக, நேற்று தாம்சா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்புகளில், டேராடூன் மாவட்டத்தில் மட்டும் 13 பேரும், நைனிடால் மற்றும் பித்தோராகர் மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளத்தில் சிக்கிய 16 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. மலைப்பகுதியின் பல்வேறு இடங்களில் 900 பேர் சிக்கித் தவித்து வருகின்றனர்.
மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக மாவட்ட நீதிபதி சவின் பன்சால் தெரிவித்துள்ளார். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் பொதுப்பணித் துறை (PWD) ஆகியவற்றின் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.