articles

img

சீத்தாராம் யெச்சூரி நினைவு சொற்பொழிவு: இந்திய விடுதலையில் தேசிய-கம்யூனிஸ்ட் பாரம்பரியம் மாற்றுக் கொள்கைகளை முன்னிறுத்தும் மாபெரும் மக்கள் அணியாக கம்யூனிஸ்ட் இயக்கம் இருக்க வேண்டும்

சீத்தாராம் யெச்சூரி நினைவு சொற்பொழிவு: இந்திய விடுதலையில் தேசிய-கம்யூனிஸ்ட் பாரம்பரியம் மாற்றுக் கொள்கைகளை முன்னிறுத்தும் மாபெரும்  மக்கள் அணியாக கம்யூனிஸ்ட் இயக்கம் இருக்க வேண்டும்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சி ஸ்ட்) முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் முதல் ஆண்டு நினைவு சொற்பொழிவில், புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் பேராசிரியர் இர்பான் ஹபீப் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் மார்க்சிய சிந்தனையின் பங்கு மற்றும் இன்றைய அரசியல் சூழ லுக்கான படிப்பினைகள் குறித்து முக்கியமான கருத்துகளை வெளியிட்டார். செப்டம்பர் 15 அன்று, தில்லியில் உள்ள சுர்ஜித் பவனில் ஏராளமானோர் பங்கேற்ற  மாபெரும் நிகழ்வில் அவர் உரை யாற்றினார். தேசிய விடுதலையின் பன்முகப் பாரம்பரியம் “இந்திய விடுதலைப் போராட்டமானது கம்யூனிஸ்ட் கட்சியின் வலுவான பங்கேற்பு, தலைமையில் நடந்தது; அதே வேளையில்,  1880களிலிருந்தே தாதாபாய் நௌரோஜி மற்றும் ஆர்.சி.தத் போன்ற தேசிய தலைவர்கள் பிரிட்டிஷ் பொருளா தாரச் சுரண்டலை கடுமையாக விமர்சித்த னர்” என்று பேராசிரியர் ஹபீப் கூறினார்.  அவர் மேலும்  “தாதாபாய் நௌரோஜி விவரித்த ‘செல்வ வடிகால்’ கோட்பாடு அதாவது, இந்திய மக்களைச் சுரண்டி பிரிட்டனுக்கு செல்வங்களைக் கொண்டு செல்வது என்பது - காரல் மார்க்ஸின் காலனியவாத விமர்சனத்திற்கு முன் னோடியாக இருந்தது. இவர்களின் பங்க ளிப்புகளுக்கு இன்று நமது பல்கலைக்கழ கங்களில் போதுமான அங்கீகாரம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.” கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றுச் சவால்கள் 1930கள் மற்றும் 1940களின் சிக்கலான அரசியல் சூழலை நினைவுகூர்ந்த பேரா சிரியர் ஹபீப், கம்யூனிஸ்ட் கட்சியின் சில தவறான முடிவுகள் குறித்தும் வெளிப்படை யாக பேசினார். “காங்கிரஸையும் முஸ்லிம் லீக்கையும் சமப்படுத்திய நமது முடிவு தவறானது. முஸ்லிம் லீக் ஒரு மதவாத அமைப்பு, காங்கிரஸ் ஒரு தேசிய இயக்கம். இந்த வேறுபாட்டை நாம் கவ னிக்கத் தவறினோம்” என்று அவர் விமர் சித்தார். மீரட் சதி வழக்கு குறித்து அவர் வெளி யிட்ட தகவல் குறிப்பிடத்தக்கது. நீதிபதி சயீத் சுலேமான், பேராசிரியர் ஹபீப்பின் தந்தையிடம் தெரிவித்ததாக கூறப்பட்ட செய்தியின்படி, கம்யூனிஸ்டுகள் நிரபராதி கள் என்று தெரிந்தும் பிரிட்டிஷ் அரசின் அழுத்தத்தால் அவர்கள் தண்டிக்கப் பட்டனர். போர்க்கால நிலைப்பாடு: கொள்கைரீதியான தெளிவு இரண்டாம் உலகப்போரின்போது கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முடிவுகளை நியாயப்படுத்திய பேராசிரியர் ஹபீப், “சோ வியத் யூனியனை ஜெர்மனி”  தாக்கிய போது போரின் தன்மையே மாறிவிட்டது. அது ஏகாதிபத்தியங்களுக்கு இடை யிலான போரிலிருந்து பாசிச எதிர்ப்பு மக்கள் யுத்தமாக மாறியது” என்று கூறினார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்து அவர், “ஜப்பான் இந்திய எல்லை யில் இருந்த நேரத்தில் பிரிட்டிஷாரை வெளியேற்ற வேண்டும் என்று சொல்வது தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு. முதலில் பாசிச சக்திகளை தோற் கடிக்க வேண்டும், பின்னர் பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தை கையாள வேண்டும் என முடிவு எடுத்திருக்க வேண்டும்” என்றார். இந்திய விடுதலைப் போருக்கு சர்வதேச ஆதரவு இந்திய விடுதலை இயக்கத்திற்கு கிடைத்த சர்வதேச ஆதரவை நினைவு கூர்ந்த அவர், “பிரிட்டனில் உள்ள தொழி லாளர் கட்சி மற்றும் மூன்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய தேசிய இயக்கத்திற்கான ஆதரவுக்காக சிறைக்குச் சென்றனர். விடுதலைப் போராட்டம் முற்றிலும் இந்தியமயமானது அல்ல, அதற்கு சர்வதேச ஆதரவு இருந்தது” என்று குறிப்பிட்டார். இன்றைய அரசியலுக்கான படிப்பினைகள் தோழர் யெச்சூரியின் அரசியல் பாரம்ப ரியத்தை நினைவுகூர்ந்த பேராசிரியர் ஹபீப், இன்றைய கம்யூனிஸ்ட் இயக்கத்தி ற்கான முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினார். “சோசலிசமும் ஜனநாயகமும் பிரிக்க முடியாத மதிப்புகள். ஒன்று இல்லாமல் மற்றொன்று இருக்க முடியாது. சர்வாதி காரத்தால் சோசலிசத்தை திணிக்க முடியும் என்பது தவறான எண்ணம்” என்று அவர் வலியுறுத்தினார். “இந்தியாவில் முழு ஜனநாயகத்தை யும் பரப்ப வேண்டும். நமது சக குடிமக்க ளின் பெரும்பான்மையால் ஏற்றுக்கொள் ளப்படும் சோசலிசத்தை கொண்டுவர வேண்டும்” என்றும் குறிப்பிட்டார். நமது பல்கலைக்கழகங்களில் மார்க்சிய சிந்தனைக்கு வழிவகுக்கும் அவ சியத்தை வலியுறுத்திய அவர், “வெறும் முழக்கங்களால் சமூக மாற்றம் வராது. அதற்கு அறிவும் சிந்தனையும் தேவை. மார்க்சிய சிந்தனை திணிக்கப்படக்கூடாது, விவாதத்தின் மூலம் வளர வேண்டும்” என்றார். மதச்சார்பின்மை குறித்து அவர் கூறிய கருத்து இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானது: “எல்லா மதங்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும். ஆனால் மதவாதத்தை எதிர்க்க வேண்டும்” என்றார். பரந்த கூட்டணியின் அவசியம் தனது உரையை நிறைவு செய்யும் போது பேராசிரியர் ஹபீப் கூறினார்: “தோழர் யெச்சூரியின் நினைவை வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாமல், செயல்களால் போற்ற வேண்டும். அனை த்து மக்களுக்கும் நீதியும் சமத்துவமும் கிடைக்கும் ஒரு இந்தியாவை உரு வாக்குவதே நமது இலட்சியம்.” தற்போதைய அரசியல் சூழலில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பங்கு குறித்து குறிப்பிட்ட பேராசிரியர் ஹபீப், “நமது இயக்கம் தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கம், அறிவுஜீவிகள், மாண வர்கள், பெண்கள், இளைஞர்கள் அனை வரையும் உள்ளடக்கிய பரந்த மக்கள் கூட்ட ணியாக இருக்க வேண்டும்” என்றார். மதவாத சக்திகளின் எழுச்சி மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வை எதிர் கொள்ள கூட்டு முயற்சியின் அவசியத்தை வலியுறுத்திய அவர், “மேலிருந்து திணிக்கப்படும் இயக்கமாக இல்லாமல், கீழிருந்து வளரும் இயக்கமாக இருக்க வேண்டும்” என்றார். தோழர் யெச்சூரியின் அரசியல் பாணி யை எடுத்துக்காட்டாக காட்டிய அவர், “வெறும் எதிர்ப்பு அரசியலில் மட்டுமல்லா மல், மாற்றுக் கொள்கைகளையும் தோழர் யெச்சூரி முன்வைத்தார். பல்வேறு கட்சிக ளுடன் கூட்டணி வைத்ததும், அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சுதந்திர அடையாளத்தைப் பாதுகாத்ததும் இன்றைய தலைவர்களுக்கு வழிகாட்டி” என்று குறிப்பிட்டார்.