states

img

பாஜக பக்கம் சாய்ந்து விட்டது பிஆர்எஸ் கவிதா மீண்டும் சாடல்

பாஜக பக்கம் சாய்ந்து விட்டது பிஆர்எஸ் கவிதா மீண்டும் சாடல்

தெலுங்கானா முன்னாள் முதல மைச்சரும், பிஆர்எஸ் கட்சி யின் நிறுவனருமான சந்திர சேகரராவின் மகள் கவிதா சமீபத்தில் கட்சியில் இருந்து (பிஆர்எஸ்) நீக்கப் பட்டார். இதனை தொ டர்ந்து அவர் தனது எம்எல்சி பதவியை யும் ராஜினாமா செய்தார். இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டப் பின்பு கவிதா ஊடகங்க ளுக்கு அளித்த பேட்டி ஒன்றில்,”நான் பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலக வில்லை. என்னை வெளியேற்றி விட்டார் கள். தற்போதைய சூழ்நிலையில் பிஆர் எஸ் பாஜக பக்கம் சாய்ந்திருப்பது போல் தெரிகிறது. சாய்ந்து விட்டது என்று கூட கூறலாம். தேர்தல் அறிவிக்கப்படும் போது தான் பாஜக - பிஆர்எஸ் முழுப்படமும் வெளிவரும்” என அவர் கூறினார்.