states

img

உ.பி: 5-ஆம் வகுப்பு மாணவியை சரமாரியாக தாக்கிய ஆசிரியர் மீது வழக்குப் பதிவு

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு மாணவியை சரமாரியாக தாக்கிய ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 5-ஆம் வகுப்பு மாணவி வீட்டுப்பாடம் முடிக்காததால், ஆசிரியர் ஒருவர் மாணவியை சரமாரியாக கன்னத்தில் 15-20 முறை அறைந்தும், கைகளில் அடித்தும் உள்ளார். இதனால் மாணவிக்கு கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை அடுத்து ஆசிரியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அப்பள்ளியில் இருந்து ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டர்.