உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் தலித் சமூகத்தை சேர்ந்த இரண்டு சிறுமைகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உ.பி: தலித் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை - 6 பேர் கைதுல், சகோதரிகளான 17 வயது மற்றும் 15 வயதுடைய இரண்டு தலித் சிறுமிகள் தூக்கில் தொங்கிய நிலையில், சடலாமாக மீட்கப்பட்டனர். சிறுமிகள் இருவரும் மாட்டிற்கு தீவனம் வெட்டிக் கொண்டிருந்த போது, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் வந்து தனது மகள்களை கடத்திச் சென்றதாக சிறுமிகளின் தாயார் குற்றம்சாட்டியிருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, சுஹைல், ஜூனைத் ஆகிய இருவரும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
மேலும், ஹபிசுல் ரஹ்மான், கரிமுதீன், ஆரிஃப் மற்றும் 2 பேர் ஆகியோர் சிறுமிகளின் சடலங்களை தூக்கில் தொடங்க விட உதவியதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆறு பேரையும் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி போலீஸார் கைது செய்து, அவர்கள் மீது போக்சோ வழக்கு, ஐபிசி 302, 323, 452, 376 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.