states

img

உ.பி: 6 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை - 2 பேர் கைது

உத்தரப் பிரதேசத்தில் 6 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்த 6 வயது சிறுவனை காணவில்லை என்று நேற்று சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ப்ரதீப் மற்றும் ரேயீஸ் ஆகிய இருவரும் கடத்தி சென்று, அச்சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், சிறுவனின் உடலை அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் வீசிவிட்டுச் சென்றுள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இதைத் தொடர்ந்து சிறுவனின் உடலை மீட்டு, உடல்கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.