தெலுங்கானா மாநிலம் ராம குண்டம்-ராகவாபுரம் இடையே உத்தரப்பிரதேசத் துக்கு தாது பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக் குள்ளானது. இதனால் அப்பகுதியில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. சரக்கு ரயிலில் இருந்த 44 பெட்டி களில் 11 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டு விபத்துக்குள்ளான தால் ரயில் போக்குவரத்தை சீர்செய்யும் பணி அதிக நேரம் எடுத்தது. இதனால் வட மாநிலங்களில் இருந்து தென் மாநி லங்கள் குறிப்பாக சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்களின் வருகை தாமதமானது. இதே போல சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களின் புறப்படும் நேரமும் தாமதமாகியது. இந்த ரயில் தடம் புரண்ட சம்பவத்தை தொடர்ந்து சுமார் 20 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 10 ரயில்கள் திருப்பி விடப்பட்டதாக தெற்கு மத்திய ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.